தந்தையைக் கொன்றவரை பழிக்கு பழி வாங்கிய மகன் … கோர்ட்டுக்குள் நீதிபதி முன்பு சுட்டுக் கொன்ற கொடூரம் !!

By Selvanayagam PFirst Published Dec 18, 2019, 10:59 AM IST
Highlights

உத்தரபிரதேசத்தில் பழிக்கு பழியாக கொலை குற்றவாளியை கோர்ட்டு அறையில் நீதிபதி முன்பே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் நஜிபாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹாஜி எஹ்சான், நிலத்தரகர். 6 மாதங்களுக்கு முன்பு இவரையும், அவரது மருமகனையும் ஒரு தகராறில் ஷாநவாஸ் என்பவர் ஜப்பார் என்ற கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்தார். 

ஷாநவாஸ், ஜப்பார் ஆகியோரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.குற்றவாளிகள் 2 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் எஹ்சானின் மகன் தந்தையை கொன்றவர்களை பழிவாங்க திட்டமிட்டார்.

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக குற்றவாளிகள் 2 பேரையும் போலீசார் பாதுகாப்புடன் திகார் சிறையில் இருந்து பிஜ்னோரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அழைத்துவந்தனர். இதை அறிந்த எஹ்சானின் மகன் உள்பட 3 பேர் துப்பாக்கிகளுடன் கோர்ட்டுக்கு வந்தனர்.

பின்னர் கோர்ட்டு அறையில் மாஜிஸ்திரேட்டு கண் முன்பே குற்றவாளிகள் 2 பேரையும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனே போலீசார் அவர்களை காப்பாற்ற பாய்ந்து சென்றனர். இதில் ஷாநவாஸ் அந்த இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தார். மற்றொரு குற்றவாளி ஜப்பார் மற்றும் 2 போலீசார் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர்.

click me!