சிவகங்கையில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து ஒருவர் வெட்டி படுகொலை; போலீசார் விசாரணை

Published : May 18, 2024, 11:57 AM IST
சிவகங்கையில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து ஒருவர் வெட்டி படுகொலை; போலீசார் விசாரணை

சுருக்கம்

சிவகங்கையில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்பாசேத்தி அருகே மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்.  கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விஜய்க்கு அவரது தாய் மாமன் பழனி குமார் மகளான பவித்ராவிற்கும் திருமணம் நடைபெற்றது. குடும்ப பிரச்சனை காரணமாக பவித்ரா  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இதனையடுத்து விஜய் கடந்த ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

பழமை வாய்ந்த சக்தி மாரியம்மன் ஆலயத்தில் நடனமாடி பரவச நிலையில் எஸ்.பி.வேலுமணி

இதனிடையே முதல் மனைவி பவித்ராவின் குடும்பத்தினர்‌ விஜய்யிடம் அடிக்கடி பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலை நேற்று இரவு பவித்ராவின் சகோதரர்  வேல்பாண்டி மற்றும்  நண்பர்கள் சேர்ந்து வந்து விஜய்யை தேடி சென்ற போது அவருடைய சித்தப்பா வேல்முருகனும், தம்பி மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இருவரையும் அந்த  கும்பல் அரிவாளால் வெட்ட வெரட்டியதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் உண்மை கிலோ என்ன விலை என்று கேட்பார் என்று தோன்றுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில்   தம்பி ஓடி தப்பித்துவிட சித்தப்பா வேல்முருகனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வேல்முருகன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பாசேத்தி காவல்துறையினர் வேல்முருகனின் உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து,  சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இக்கொலை சம்பவம் திருப்பாசேத்தி  பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விசாரணைக்கு சென்ற இளைஞர் திடீர் மரணம்! 6 போலீசார் பணியிடை நீக்கம்! என்ன நடந்தது?
அதிகாலையில் நொடி பொழுதில் நடந்த பயங்கர விபத்து! 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு! 16 பேர் படுகாயம்!