தஞ்சையில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வாயில் துணையை வைத்து அடைத்து கழுத்து அறுத்து கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவரது மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜமனோகரன் (வயது 71). இவர் திருவாரூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த மே 14ம் தேதி குளியலறையில் வாயில் துணியை அடைத்து வைத்த நிலையில் கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த அவரது மூத்த மகள் மனோரம்யா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
பழமை வாய்ந்த சக்தி மாரியம்மன் ஆலயத்தில் நடனமாடி பரவச நிலையில் எஸ்.பி.வேலுமணி
விசாரணையில், ராஜ மனோகரின் மூத்த மகள் மனோரம்யா திருமண தகவல் மைய செயலி மூலம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பூமாலூரை சேர்ந்த ராஜகுமாரை (வயது 43) காதல் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.
சிவகங்கையில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து ஒருவர் வெட்டி படுகொலை; போலீசார் விசாரணை
இதனால் மனைவியின் மீது ஆத்திரத்தில் இருந்த ராஜ்குமார் தனது மனைவியை கொல்ல திட்டம் தீட்டினார். இதனால் தனது நண்பரான சரவணகுமார் உடன் 16ம் தேதி வீட்டின் பின்புறம் சுவர் ஏறி குதித்து மனோரம்யாவை கொல்ல காத்திருந்துள்ளார. ஆனால் மனோரம்யா குளிக்க வராமல் அவரது தந்தை ராஜமனோகரன் குளிக்க வந்ததால் என்ன செய்வது என்று தெரியாத ராஜகுமார் அவர் வாயில் துணியை வைத்து கழுத்தறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து ராஜ்குமார் மற்றும் சரவணகுமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.