தாறுமாறாக ஓடி கவிழ்ந்த அரசுப் பேருந்து.. பெண் ஸ்பாட் அவுட்.. 25 பேர் படுகாயம்!

By vinoth kumarFirst Published Apr 24, 2024, 10:42 AM IST
Highlights

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 

தஞ்சாவூரில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை ஸ்டார் லைன் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க: சென்னையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட காதல் கணவர்! 4 மாதத்தில் மனைவி தற்கொலை! என்ன காரணம்? பகீர் தகவல்!

இந்த விபத்து குறித்து வகாவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்தில் தஞ்சாவூரை சேர்ந்த லட்சுமி(50) என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க:  தாயுடன் உல்லாசம்! இடையூறாக இருந்த 6 வயது சிறுமி துடிதுடிக்க கொலை? நடந்தது என்ன? போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை!

click me!