இஸ்லாமிய குடும்பத்துக்கு சீர் வரிசையாக சென்று ரம்ஜான் விருந்தளித்த இந்து மக்கள்: தஞ்சையில் நெகிழ்ச்சி!

By Manikanda PrabuFirst Published Apr 11, 2024, 8:15 PM IST
Highlights

குடும்ப தலைவரை இழந்த இஸ்லாமிய குடும்பத்துக்கு சீர் வரிசையாக சென்று இந்து மக்கள் ரம்ஜான் விருந்தளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் இல்லாதவருக்கு கொடுத்து உதவி இஸ்லாமிய மக்கள் அகம் மகிழ்கின்றனர். இந்த நிலையில், குடும்ப தலைவரை இழந்த இஸ்லாமிய குடும்பத்துக்கு சீர் வரிசையாக சென்று இந்து மக்கள் ரம்ஜான் விருந்தளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குடும்ப தலைவரை சில தினங்களுக்கு முன் இழந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள இஸ்லாமிய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்து மக்கள் ஒன்று சேர்ந்து புத்தாடைகள், அரிசி, மளிகைப் பொருட்கள் வாங்கி  சீர் வரிசையாக எடுத்து வந்து கொடுத்து அகம் மகிழ்ந்தனர். மேலும், ரம்ஜான் பண்டிகை தின வாழத்துகள் கூறி பிரியாணி விருந்தும் அளித்தனர்.

தஞ்சை நாஞ்சிக் கோட்டை சாலையில் உள்ள குடியிருப்புகள் காலணியில் இஸ்லாமிய குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் இக்குடும்பத்தின் தலைவர் இறந்து விட்டார். இதனால், மிகவும் வறுமையான சூழலில் அக்குடும்பத்தினர் தவித்து வந்துள்ளனர்.

மக்கள் பணத்தில் உல்லாசமாக வெளிநாடு டூர் போன ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!

இவர்களது நிலைமையை புரிந்து கொண்ட அந்த காலணியில் வசிக்கும் இந்துக்கள் ஒன்று சேர்ந்து, இல்லாமிய குடும்பததில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள், ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களை வாங்கி சீர் வரிசையாக எடுத்து வந்து இஸ்லாமியர் குடும்பத்தினருக்கு வழங்கினார்கள்.

பின்னர் பெண்கள் கட்டி அனைத்து இஸ்லாமிய குடும்ப பெண்களுக்கு ஆறுதல் கூறினார்கள். வீட்டுக்காரர் இல்லைனு வருத்தப்பட கூடாது என ஆறுதல் கூறி பண்டிகை தின வாழ்த்துகளை கூறியவர்கள், மதம் பார்க்கக்கூடாது அனைவரும் மனிதர்கள் தான் என்றனர். தொடர்ந்து, காலணியில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் ரம்ஜான் பிரியாணி விருந்து ருசித்து மகிழ்ந்தனர்.

click me!