தமிழகத்தை தாண்டி செல்வாக்கு இல்லாத முதல்வர் ஸ்டாலின் - வானதி சீனிவாசன் விமர்சனம்

By Velmurugan s  |  First Published Apr 6, 2024, 5:22 AM IST

தமிழகத்தை தாண்டி செல்வாக்கு இல்லாத முதல்வர் ஸ்டாலின், இந்தியாவுக்கே தான் தான் வழிகாட்டி என்று கூறுவது நகைப்புக்குரியது என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடிக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்குவோம் என இண்டியா கூட்டணியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். மீண்டும் பிரதமராக மோடி தான் வர போகிறார், மத்தியில் பா.ஜ., கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது என தெரிந்ததும், இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக பா.ஜ., கூட்டணியில் இணைந்து விட்டார்கள்.  

கடந்த 5 ஆண்டுகள் தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.,க்கள் பார்லிமென்டில் எப்படி பெஞ்ச் தேய்த்து விட்டு வந்தார்களோ, அதே நிலைமை தான் நடக்கும். எனவே, தயவு செய்து மக்கள் உங்கள் ஓட்டுக்களை வீணாக்கி விடாதீர்கள். முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு நாளும், அவரது தேர்தல் பிரச்சாரத்தில், இந்தியாவுக்கே தான் தான் வழிக்காட்ட போவதாக பேசி வருகிறார். தமிழகத்தை தாண்டி செல்வாக்கு இல்லாத முதல்வர் இந்தியாவுக்கு வழிகாட்டுவதாக கூறுவது நகைப்புக்குரிய விஷயம். கற்பனை உலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வாழ்கிறார்.  

Tap to resize

Latest Videos

undefined

5 வருசமா எதுவுமே செய்யாத நீங்க இனிமே என்ன செய்ய போறீங்க? ஜோதிமணிக்கு எதிராக கொந்தளித்த மக்கள்

தமிழகத்தில் பா.ஜ., எங்களுக்கு போட்டியே இல்லை என கூறி விட்டு, ஒவ்வொரு நாளும் பா.ஜ.,வை வைத்து தான் தி.மு.க., அரசியல் செய்துக்கொண்டு இருக்கிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்ற புளுகுமூட்டையை சுமந்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு ஊர் ஊராக சென்றுகொண்டு இருக்கிறார். நீங்கள் கூட்டணியில் இருந்த போது வந்த நிதியை விட, கடந்த 10 ஆண்டுகளில், அதிகளவில் நிதி வந்துள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கு அதிகமான நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. 

காவிரி பிரச்சினையை பிரதமர் மோடி ஒரு எளிமையான மற்றும் ஒத்துழைப்பு சார்ந்த விஷயமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி நீரை தரமாட்டோம் என்பதும், தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சி இதுபற்றி பேசாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு மக்களை ஏமாற்றும் கூட்டணியாக தி.மு.க., காங்கிரஸ் தமிழகத்தில் உள்ளது. இந்த ஏமாற்று நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். 

குழந்தைக்கு பெயர் சூட்டி அள்ளி கொஞ்சிய சௌமியா அன்புமணி; தொண்டர்களின் செயலால் வேட்பாளர் நெகிழ்ச்சி

டெல்டாவில் வேலைவாய்ப்பு இல்லை. ஆன்மீகம் சார்ந்த சுற்றுலா தலமாக மாற்றினால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். ஆனால் தமிழக அரசு அதை செய்யவில்லை.  டெல்டாக்காரன் என முதல்வர் கூறும் நிலையில், டெல்டா இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான தொலை நோக்கு இல்லை என்பது தான் வேதனை. இளைஞர்கள், பெண்கள் வேதனையை அறியாத இண்டியா கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இதற்கான பணி தொடரும். கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடிக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து தி.மு.க., ஓட்டுக்களை அறுவடை செய்தது. இந்த தேர்தலிலும் அந்த அறுவடையை திரும்ப செய்ய முடியுமா என்ற முயற்சியில் தான் 29 பைசா கதை. 

பிரதமரை 29 பைசா என கேவலமாக பேசுவேன் என கூறினால், போதை பொருட்களால் இளைஞர்களை சீரழித்துக்கொண்டு இருக்கின்ற, கடத்தல் கும்பலை கூட வைத்துள்ள உங்களுக்கு என்ன பெயர் வைப்பது? டிரக் உதயநிதி என கூறுவோம். எங்களுக்கும் பெயர் வைக்க தெரியும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் உழைக்கின்ற மோடியை பார்த்து வாரிசு அரசியலில் வந்துள்ள உதயநிதி பேசவும், மோடியை விமர்சனம் செய்யவும் எந்த அருகதையும் கிடையாது இவ்வாறு அவர் கூறினார்.

click me!