குழந்தைக்கு பெயர் சூட்டி அள்ளி கொஞ்சிய சௌமியா அன்புமணி; தொண்டர்களின் செயலால் வேட்பாளர் நெகிழ்ச்சி
தருமபுரி மாவட்டத்தில் எங்கள் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும் என்று அன்பு கட்டளையிட்ட பாமக தொண்டரின் செயலால் நெகிழ்ந்துபோன வேட்பாளர் சௌமியா அன்புமணி குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
பாஜக கூட்டணியில் அங்கம் பெற்று நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சி மொத்தமாக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் குறிப்பிடும் விதமா, கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நாள் முதல் சௌமியா அன்புமணி தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் வேட்பாளர் என்பதை கடந்து பெண்கள், குழந்தைகளிடம் அவர் அன்பாக நடந்து கொள்ளும் விதம் அவருக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பேருந்தில் பயணம் செய்யும் பெண்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தொண்டர்களுக்கு மதிப்பளிப்பது என கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் கச்சிதமாக பயன்படுத்தி வருகிறார்.
கோவை அருகே மகன், மகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்; பசியின் கொடுமையால் நிகழ்ந்த சோகம்?
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு வாக்கு சேகரிக்கச் சென்ற அவருக்கு அப்பகுதி பெண்கள் மாம்பழத்துடன் வந்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அங்கு பிரசாரத்தை முடித்துக் கொண்டு, தேங்காய்மரத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்தார். அப்போது அங்கு வந்த பாமக தொண்டர் ஒருவர் தனது குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். இதனால் நெகிழ்ச்சியடைந்த சௌமியா அன்புமணி, அக்குழந்தைக்கு “இளம் முகிலன்” என பெயர் சூட்டினார். தொடர்ந்து வேட்பாளருக்கு தொகுதியில் கிடைக்கும் அமோக வரவேற்பை பார்த்து பாமக நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.