மாட்டு வண்டியில் சென்று ஸ்கோர் செய்ய நினைத்த தேமுதிக வேட்பாளர்; மாடு மிரண்டதால் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்

By Velmurugan s  |  First Published Apr 4, 2024, 1:38 PM IST

தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் மாத்தூர் கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரித்த போது திடிரென மாட்டு வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகம் வரவுள்ளனர். இந்நிலையில், தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாத்தூர், மாத்தூர் கிழக்கு, மேற்கு, நல்லிச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாத்தூர் காளியம்மன் கோவிலில் வழிப்பட்ட வேட்பாளர் சிவநேசனுக்கு கோவில் குருக்கள் பூரண கும்ப மரியாதையுடன் பரிவரிட்டம் கட்டி வரவேற்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர் சிவநேசன் மீது பெண்கள் பூக்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும், ஆடல், பாடலுடன் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் மஞ்சள் புடவை கட்டிய பெண் ஒருவர் திடிரென சாமியாடி குறி சொன்னார். குறி சொன்ன பெண்ணின் காலில் விழுந்து வேட்பாளர் ஆசி பெற்றார். மேலும் கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர் பறை இசைக்கு வைஃப் ஆகி சாலையில் புலி ஆட்டம் ஆட தொடங்கினார்.

மேடையில் ஆக்ரோஷமாக பேசிய எடப்பாடி; சாரை சாரையாக வெளியேறிய மக்கள் - கரூர் அதிமுக கூட்டத்தில் அதிர்ச்சி

வேட்பாளர் சிவநேசன் தன் உடன் வந்த கட்சி நிர்வாகிகளுக்கு இளநீர் வெட்டி கொடுத்தார். பின்னர் மாத்தூர் சாலையில் இரட்டை மாட்டு வண்டி ஒட்டி வாக்கு சேகரித்து வந்தார். அப்போது மாடு மிரள வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

click me!