ஒருத்தரையும் ஓட்டு போட விடமாட்டேன்; வேட்பு மனுவை ஏற்ககோரி மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Mar 28, 2024, 7:51 PM IST

தஞ்சையில் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால், ஒவ்வொருவரின் விரலையும் உடைப்பேன், ஒருவரையும் ஓட்டு போட விடமாட்டேன் என மிரட்டல் விடுத்த நபரால் தேர்தல் அலுவலகத்தில் பரபரப்பு.


தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு பரிசீலனை ஆட்சியர் அறையில் நடந்து கொண்டு இருந்தது. வேட்பாளர்களுடன் வந்தவர்கள் தனி அறையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். அப்போது. மத்திய பாதுகாப்பு படை வீரர் உடையில் வந்த ஒருவர் மற்றவர்களுடன் சேர்ந்து அமர்ந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

அனைவரிடமும் சகஜமாக பேசிக் கொண்டு இருந்தவர் திடிரென வெளியே வந்து தே.மு.தி.க வேட்பாளரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார். பின்னா் நேராக வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் மைக் முன்பு வந்து நின்று கொண்டு அய்யா வணக்கம். தஞ்சை மாவட்ட வாக்காளர் அனைவருக்கும் வணக்கம். மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். இது காலத்தின் கட்டாயம்.

பணம் கொடுப்போம்னு சொல்லி ஏமாத்திட்டாங்க; தேனியில் பரப்புரைக்கு அழைத்து வரப்பட்ட பெண்கள் குமுறல்

பாரம் 26 தெரியாதனமாக நான் தவறுதலாக ஒரு சனியன தொட்டு விட்டேன். அதை தொடவும் முடியல, விடவும் முடியல என புலம்பினார். தொடர்ந்து பேசியவர், எனக்கு பொண்டாட்டி புள்ள இருக்கு. இந்த மக்களுக்காக எந்த குறையும் நிறைவேற்ற முடியாது. கேஸ் விலை உயர்ந்து இருக்கு, அரிசி விலை உயர்ந்து இருக்கு மக்களே தயவுசெய்து என்னை இந்த முறை தேர்ந்தெடுங்கள் விமோசனம் நடக்கும். 

இந்த முறை என்னை நீங்கள் தோற்கடித்தால் உங்களை காப்பாற்ற யாராலும் முடியாது என சாபம் விட்டார். மேலும், என்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால், கையில் பட்டாகத்தி எடுத்துக்கொண்டு ஃபிளையிங் ஸ்குவாடை அழைத்து கொண்டு ஒவ்வொருத்தர் விரல்களை உடைப்பேன், ஓட்டு போட விடமாட்டேன், ஒவ்வொருவரையும் அடிப்பேன் என மிரட்டும் தொனியில் பேசினார்.

ஜெயலலிதாவை தீர்த்து கட்டியதே பாஜக தான்; என்னிடம் ஆதாரம் உள்ளது - மன்சூர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஏண்டா ஓட்டு போட்ட, ஏண்டா ஓட்டு போடவில்லை என்று அடிப்பேன். ஒருத்தனையும் விட மாட்டேன். தான் மிலிட்டரி ஆபீஸர், பெரிய கேப்டன், டிரெயினிங் ஆபிஸர் என மாற்றி மாற்றி பேசினார். பின்னர் காவல் துறையினர் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்.

click me!