6 முறை எம்.பி.யாக இருந்த பழனிமாணிக்கம் கழற்றிவிடப்பட்டார்! ஜெ. பாணியில் ஸ்டாலின்! யார் இந்த முரசொலி தெரியுமா?

By vinoth kumar  |  First Published Mar 21, 2024, 6:50 AM IST

தஞ்சாவூர் மக்களவை தொகுதி தேர்தலில் 9 முறை போட்டியிட்டு, 6 முறை வெற்றி 3 முறை தோல்வியடைந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக புதுமுக வேட்பாளாராக முரசொலி களமிறங்கப்பட்டுள்ளார். 


தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவின் சீனியர்களில் ஒருவரான எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு புதுமுக வேட்பாளராக முரசொலி களமிறக்கப்பட்டுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில்,  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகளும்,  இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதியும், மதிமுக, முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 

Latest Videos

undefined

இதையும் படிங்க: விவசாயி முதல் பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் வரை? யார் இந்த ஈஸ்வரசாமி.?

இந்நிலையில், 21 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதில் 10 எம்.பி.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. 11 புதுமுகங்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தஞ்சாவூர் மக்களவை தொகுதி தேர்தலில் 9 முறை போட்டியிட்டு, 6 முறை வெற்றி 3 முறை தோல்வியடைந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக புதுமுக வேட்பாளாராக முரசொலி களமிறங்கப்பட்டுள்ளார். 

யார் இந்த முரசொலி?

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னங்குடி கிராமத்தில் கே.சண்முகசுந்தரம் - தர்மசம்வர்த்தினி தம்பதியினரின் 3வது மகனாக 1978ம் ஆண்டு முரசொலி பிறந்தார். இவரது தந்தை 1971ம் ஆண்டு ஊராட்சி மன்றத் தலைவராகவும், தென்னங்குடி தொடக்க வேளாண்மை சங்கத் தலைவர் பதவி வகித்தவர். முரசொலி, இயற்பியல் இளங்கலை பட்ட படிப்பை தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியிலும், முதுகலை சட்ட படிப்பை பெங்களூர் ராம் மனோகர் லோகியா சட்டப் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.

இவர் 2004 முதல் தென்னங்குடி ஊராட்சி பிரதிநிதியாகவும், 2006 – 2011 வரை தஞ்சாவூர் ஒன்றியக்குழு உறுப்பினராகவும், 2014 - 2020 வரை திமுக பொதுக்குழு உறுப்பினராகவும், 2020 தஞ்சை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, 2022இல் நடைபெற்ற திமுகவின் 15வது அமைப்பு தேர்தலில், தஞ்சை வடக்கு ஒன்றியச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தஞ்சாவூர் திமுக வேட்பாளாராக களமிறங்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க:  பொன்முடி மகனுக்கு கல்தா..! கே.என் நேரு மகனுக்கு ஜாக்பாட்- திமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்பிக்கள் யார் .?

2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் இதே மாதிரி யாருமே எதிர்பாரத வகையில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பரசுராமன் என்பவரை அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்து டி.ஆர்.பாலுவை வீழ்த்தினார். தற்போது அதே பாணியில் தஞ்சை வேட்பாளராக முரசொலி களமிறங்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!