2026 தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன் - வி.கே. சசிகலா பரபரப்பு பேட்டி

By Velmurugan s  |  First Published Mar 20, 2024, 8:02 PM IST

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கும், திமுகவுக்கும் தான் நேரடி போட்டி இருக்கும், அப்போது நான் யார் என்பதை காட்டுவேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது மக்கள் தான்.

சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை நாடாளுமன்ற தேர்தலுக்கு ரீ ரிலீஸ் செய்த திமுக; வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி

Latest Videos

undefined

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் 3 அணிகளாக உள்ள அதிமுக ஓரணியில் சேர வாய்ப்புள்ளது என்பது எனது அனுமானம். அப்போது அதிமுகவின் பலம் என்ன என்பது அனைவருக்கும் புரியும். 2026 சட்டமன்ற தேர்தல் என்பது எங்களுக்கும், திமுகவுக்கும் நேரடிப் போட்டியாக இருக்கும். அப்போது நான் யார் என்பதை காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன்.

அருப்புக்கோட்டையில் காட்டு பகுதியில் கேட்ட அக்கா, தங்கையின் அலறல் சத்தம்; காமுகன்கள் வெறிச்செயல்

நாடாளுமன்றத் தேர்தலில் யார் மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்திருப்பது அதிமுகவின் பங்காளி சண்டை. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் அதிமுக வேட்பாளராகவே போட்டியிடுவார். அந்த தேர்தலில் அதிமுக ஓரணியில் இணைந்து வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அமரும் என தெரிவித்துள்ளார்.

click me!