காவிரி விவகாரம்: பாஜக, காங்கிரஸ் யார் ஆட்சி செய்தாலும் வஞ்சிக்கப்படுவது தமிழகம் தான் - பழனிசாமி பேச்சு

By Velmurugan s  |  First Published Feb 29, 2024, 11:10 PM IST

பாஜக, காங்கிரஸ் என எந்த கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவது தமிழகம் தான் என தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழகத்துக்குக் காவிரி நீர் பெற்றுத் தராததைக் கண்டித்தும் தஞ்சை மாவட்ட திலகர் திடலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுகவினர் பங்கேற்றனர். 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக 50 ஆண்டு காலமாக அதிமுக சட்டப் போராட்டத்தை நடத்தி வந்தது. உச்ச நீதிமன்றம் வரை ஜெயலலிதா சென்று சட்டப் போராட்டத்தை நடத்தினார். துரதிருஷ்டவசமாக ஜெயலலிதா மறைந்தாலும், அவரது எண்ணப்படி உச்ச நீதிமன்றம் மூலம் காவிரி பிரச்சினைக்கு அதிமுக அரசு தீர்வு கண்டது. அத்தீர்ப்பை நிலை நிறுத்துவதற்கு அதிமுகவை சார்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாள்களுக்கு போராட்டம் நடத்தியதால், மத்திய அரசு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் அமைப்பையும் அமைத்தது.

Tap to resize

Latest Videos

undefined

மத்தியில் காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை தருவதற்கு கர்நாடக அரசு மறுக்கிறது. இதை திமுக அரசும் தட்டிக் கேட்காததுடன், நமக்குத் தேவையான நீரையும் பெற்றுத் தரவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கர் நெற் பயிர்கள் பால் பிடிக்கும் நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் கருகிவிட்டன.

ஸ்டெர்லைட் ஆலையின் மனுவை தள்ளுபடி; நமது வலிமையான சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்ற என முதல்வர் பெருமிதம்

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை குறித்த பொருள் இருந்தும் தமிழ்நாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர். உடனடியாக வெளிநடப்பு செய்யாமல், கலந்து கொண்டதால், அத்தீர்மானம் நிறைவேறியதாகக் கூறி மத்திய நீர் வள ஆணையத்துக்கு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்தது. அதிமுக பெற்றுத் தந்த தீர்ப்பைக் காப்பாற்ற முடியாத அரசாக திமுக அரசு உள்ளது. இதை மத்திய அரசு என்ன செய்யப் போகிறது எனத் தெரியவில்லை. இதை எதிர்த்துதான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. மேகதாது அணையைக் கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்.

திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்தவித நன்மையும் கிடைக்காது. கோதாவரி, காவிரி இணைப்பு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கிடப்பில் போட்டார்கள். மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்த திட்டம் நிறைவேறினால் வறட்சியான புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டம் பசுமையாக மாறும். மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். விவசாயிகளின் ரத்தத்தை அட்டை போல் இந்த அரசு உறிஞ்சிகிறது. 

அக்னி பகவானே இந்த வருசம் பணம் கொட்டனும்; வங்கி லாக்கர் முன் யாகம் வளர்த்த அதிகாரிகள் - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமானால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்போம். எனவே, அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து, மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

click me!