லோகேஷை அசர வைத்த YouTube சேனல்.. அவங்க பயன்படுத்தும் கேமரா 34 லட்சமாம் - மாஸ் காட்டும் அந்த YouTubers யார்?

By Ansgar R  |  First Published Oct 12, 2023, 9:06 PM IST

வேகமாக நகர்ந்து வரும் இந்த டிஜிட்டல் உலகில் சரியான திறமை இருந்தால் அனைவரும் பெரும் பொருளை ஈட்டலாம் என்பது நிரூபணமாகி வருகின்றது. அந்த வகையில் வெகு சில வருடங்களில் மிகப்பெரிய உச்சங்களை தொட்டு வருகின்றனர் பல YouTuberகள்.


பொதுவாக ஒரு யூட்யூப் சேனல் ஆரம்பித்து அதனை மெல்ல மெல்ல வளர்த்து மக்கள் மத்தியில் அதை பிரபலப்படுத்தி, தங்கள் வீடியோக்களை மக்கள் பார்வையிடுவதன் மூலம் பலர் நல்ல வருமானத்தை ஈன்று வருகின்றனர். பொதுவாக ஒரு YouTube சேனனில் வெளியாகும் வீடியோ, 1 மில்லியன் வியூஸ் வந்தாலே அது ஒரு நல்ல வரவேற்பாக பார்க்கப்படுகிறது. 

ஆனால் ஒரு YouTube சேனலில் அவர்கள் வெளியிடும் வீடியோக்கள் அனைத்துமே குறைந்தபட்சம் 15 மில்லியன் முறையாவது பார்க்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் நாம் அனுதினம் பல வீடியோக்களை இந்த யூடியூப் சேனல்களில் பார்த்திருப்போம் அவர்கள் தான் வில்லேஜ் குக்கிங் சேனல். கிராமத்து இளைஞர்கள் நால்வரும், அவர்களுக்கு உதவும் ஒரு முதியவரும் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட ஒரு யூடியூப் சேனல் இன்று சுமார் 22.7 மில்லியன் மக்களால் Follow செய்யப்பட்டு வருகிறது. 

Tap to resize

Latest Videos

ராஜமௌலி முதல் அட்லீ வரை.. ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை.. பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர்கள்..

பிரபல நடிகர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடைய விக்ரம் திரைப்படத்தில் இவர்கள் ஒரு காட்சியில் தோன்றுவது அனைவரும் அறிந்ததே. ஒரு முறை காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி கூட இவர்களுடன் இணைந்து உணவு சமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் மட்டும் இந்தியா என்று இல்லாமல், உலக அளவில் இவர்களுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. 

"இன்னைக்கு ஒரு புடி.. எல்லாரும் வாங்க.. ஆல்வேஸ் வெல்கம்" என்கின்ற இந்த வார்த்தைகளை நாம் நிச்சயம் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது கேட்காமல் இருக்க முடியாது. இந்நிலையில் இந்த YouTuberகள் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் அண்மையில் வெளியாகி உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்பட ப்ரமோஷன் பணியில் ஈடுபட்டிருந்தபொழுது, அவருக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் வீடியோ கால் மூலம் வில்லேஜ் குக்கிங் சேனல் YouTuberகள் அவரை சந்தித்து பேசினார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்பொழுது அவர்கள் வாங்கியுள்ள ஒரு புதிய கேமராவை பற்றி அவர்கள் லோகேஷ் கனகராஜிடம் கூறிய போது அவரே பிரமித்து போய் உள்ளார். காரணம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட லியோ திரைப்படத்திலும் கூட அந்த கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அவர்கள் அந்த கேமராவை தங்கள் youtubeல் பயன்படுத்தி வருகிறார்களாம். அது ரெட் ராப்டர் வகை கேமரா என்று கூறப்படுகிறது. 

Village Cooking Channelல் Red V Raptor XL என்ற கேமராவை தான் இப்பொது பயன்படுத்திகிறார்களாம். அதன் விலை சுமார் 34 லட்சத்திலிருந்து 58 லட்சம் வரை என்று கூறுகிறார்கள் ஒரு youtube சேனல் நடத்தும் சிலர் இதுபோன்ற கேமராக்களை பயன்படுத்தி படம் பிடிப்பது மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது உண்மையில் மக்களின் ஆதரவும் சரியான திறமையும் இருந்தால் அனைவரும் முன்னேறலாம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர் வில்லேஜ் குக்கிங் சேனல்.

ஐந்து நிமிடத்திற்கு மேல ஒரு இடத்தில் உட்கார மாட்டார் - பாவா செல்லத்துரை பற்றிய சீக்ரெட் சொன்ன ரேகா நாயர்!

click me!