விஜய் டிவி தொலைக்காட்சியில் சமீபத்தில் துவங்கப்பட்ட, 'ஆஹா கல்யாணம்' சீரியல், விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதுகுறித்த லேட்டஸ்ட் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும், சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. அந்த வகையில், தன்னுடைய மூன்று மகள்களையும் பணக்கார வீட்டுக்கு மருமகளாக அனுப்ப வேண்டும் என நினைக்கும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த, கோடீஸ்வரி இதற்காக எத்தனையோ தில்லு முள்ளு செய்து தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவை, பணக்கார வீட்டை சேர்ந்த ஹீரோவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.
ஆனால் ஐஷுவை பணக்கார பெண் என நம்பி, ஏமார்ந்து போகும் ஹீரோவின் தம்பி கெளதம் தனி ட்ராக் போட்டு, ஐஸ்வர்யாவை காதலிக்கிறார். சூர்யாவுடன் ஐஷுவுக்கு திருமணம் ஆக போகும் நேரத்தில், அங்கிருந்து வெளியேறச்சொல்லி, ஐஷுவை ஹோட்டலில் தங்க வைத்து பார்த்து கொள்கிறார். ஐஷு மண்டபத்தை விட்டு ஓடியதால்... அவரின் தங்கை மஹா சூர்யாவை திருமணம் செய்து கொள்ள நேர்கிறது.
சமந்தாவுக்கு நயன்தாரா அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்..! என்ன தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!
இந்த திருமணத்தால் பல அவமானங்களுக்கு ஆளாகிறார் மஹா. பின்னர் கெளதம் தான் ஐஸ்வர்யாவை ஏமாற்றியது என்கிற உண்மை சூர்யாவுக்கு மட்டும் இன்றி, அனைவருக்குமே தெரியவருகிறது. கௌதமுக்கு வேறு ஒரு இடத்தில் திருமண ஏற்பாடு நடக்க, ஐஸ்வர்யா தான் கர்ப்பமாக இருப்பதாக கேம் ஆடுகிறார். இதனை நம்பி மஹா, அனைவரிடமும் இதுகுறித்து பேசி, இருவருக்கும் திருமணமும் செய்து வைக்கிறார். ஆனால் கெளதம் தொடர்ந்து, மஹாவை கெட்டவள் போல் ஐஸ்வர்யா முன்பு காட்டி கொண்டு.. தன்னை நல்லவனாக காட்டிக்கொள்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தற்போது தன்னுடைய அம்மாவின் பேச்சை கேட்டு கொண்டு, ஐஸ்வர்யா கர்ப்பத்தை கலக்க அவருக்கு பப்பாளி பழங்களை வாங்கி வந்து கொடுத்து சாப்பிட வைக்கிறார். இது தான் ஐஸ்வர்யாவை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. ஐஸ்வர்யா தான் கர்ப்பமாக இருப்பதாக அனைவரிடமும் பொய் சொல்லி வரும் நிலையில், பப்பாளி சாப்பிட்டதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என மருத்துவர் வந்து செக் பண்ண உண்மை வெளிவருமா? அல்லது என்ன சொல்லி ஐஸ்வர்யா சமாளிப்பார் என்கிற பரப்பான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
ஐயோ.. மாட்டிக்க போறீங்களா..😮
ஆஹா கல்யாணம் - திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. pic.twitter.com/b4Psd7ptSJ