பிக்பாஸ்ஸிடம் இருந்து விஜய் டிவி பிரபலத்திற்கு சென்ற கிஃப்ட்! இவர் தான் வைல்ட் கார்டா? வைரலாகும் வீடியோ!

By manimegalai a  |  First Published Oct 10, 2023, 9:50 PM IST

பிக்பாஸ்ஸிடம் இருந்து, விஜய் டிவி பிரபலத்திற்கு தற்போது கிஃப்ட் ஒன்று சென்றுள்ள நிலையில், அவர் தான் வைல்ட் கார்டு போட்டியாளராக களமிறங்க உள்ளாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
 


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, அக்டோபர் 1-ஆம் தேதி, மிக பிரமாண்டமாக துவங்கிய நிலையில், இந்த முறை முதல் வாரத்தில் இருந்தே ஏவிக்ஷன் ப்ராசெஸ் துவங்கியது. மேலும் முதல் வாரம், யாரும் எதிர்பாராத விதமாக, மாடலும் - நடிகையுமான அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் உள்ளே போட்டியாளராக நுழைந்த எழுத்தாளரும் - நடிகருமான பவா செல்லதுரை தன்னுடைய உடல் நிலை இந்த போட்டிக்கு ஒத்துழைக்க வில்லை என கூறியதை தொடர்ந்து, பிக்பாஸ் நேற்றைய தினம் அவரை வெளியேற்றினார்.

அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், கூடிய விரைவில் பிக்பாஸ் வைல்ட் கார்டு போட்டியாளரை களமிறக்க தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து தனக்கு கிப்ட் ஒன்று வந்துள்ளதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

விஷால் - எஸ்.ஜே.சூர்யா சிலுக்கோடு வந்து மாஸ் காட்டிய 'மார்க் ஆண்டனி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதை பார்த்து ரசிகர்கள் சிலர், ஒரு வேலை இவர் தான் வைல்ட் கார்டு எண்ட்ரியாக என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரம் வைல்ட் கார்டு போட்டியாளரை கூட யார் என்று சொல்லாமல் மிகவும் சீக்ரெட்டாக உள்ளே இறங்குவார் பிக்பாஸ். எனவே இவர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெரிகிறது. 

அதே நேரம், பிக்பாஸ்ஸிடம் இருந்து ஏன் நாஞ்சில் விஜயனுக்கு கிஃப்ட் அனுப்படவேண்டும் என்கிற கேள்வி மனதை துளைத்துக்கொண்டிருந்தாலும், இதற்கான.. விடை கூடிய விரைவில் அறிவிக்கப்படும்... அது வரை கார்த்திருப்போம். 

தற்போது வைரலாகி வரும் வீடியோ இதோ..

 

click me!