பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின், முதல் கேப்டனான விஜய் வர்மா, கொஞ்சம் ஓவராக வாயை விட்டு சிக்கிய நிலையில், அவருக்கு ரெட் கார்டு பயத்தை காட்டியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.
பிக்பாஸ் சீசன் 7 தமிழ், நிகழ்ச்சி எதிர்பாராத பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. 40 நாட்களுக்கு பின்னர் போட வேண்டிய சண்டைகளை, இந்த முறை வீட்டிற்குள் வந்துள்ள போட்டியாளர்கள் 4 நாட்களில் போட்டு கொண்டது, பலரும் எதிர்பாராத ஒன்று என கூறலாம்.
நேற்றைய தினம், போட்டியாளர்கள் முன் முதல் முறையாக தோன்றிய கமல்ஹாசன்... ஜோவிகா மற்றும் விசித்ரா இடையே இருந்த படிப்பு குறித்த பிரச்னையை, மிகவும் சாமர்த்தியமாக பட்டும் படமால், டீல் செய்தார். காரணம் படிப்பு என்பது, இந்த காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்று. அதனை யாராலும் மறுக்க முடியாது. அதே நேரம் தனக்கு படிப்பு வரவில்லை என கூறும், ஜோவிகா... படிப்பை தாண்டி ஒரு நடிகையாகவும், டெக்னீஷியனாகவும் தன்னால் சாதிக்க முடியும் என நம்புவதையும் தவறு என கூறிவிட முடியாது அதனால் இருதரப்பு பற்றியும் அதிகம் விவாதிக்காமல் மேலோட்டமாக பேசி இந்த பிரச்னையை முடித்தார்.
அதே போல் பாவ கூறிய ரைட்டர் வேலைக்கார பெண் இடுப்பை கிள்ளியை கதை, பல போட்டியாளர்களுக்கு நெருடலை ஏற்படுத்திய நிலையில், அதற்க்கு கமல்ஹாசன் தன்னிலை விளக்கம் கொடுத்தது அற்புதம். இதை தொடர்ந்து இன்றைய தினம், வன்முறையோடு வார்த்தைகளை விட்ட, முதல் கேப்டனான விஜய் வர்மாவை தான் வெளுத்து வாங்கியுள்ளார். இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரதீப் எடுத்து சென்ற ஷூ தன்மீது பட்டு விட்டதாகவும் இதுபோல் நடந்தால் திடீர் என தனக்கு கோவம் வந்துவிடும், என கூறி தன்னுடைய முழங்கையை மடக்கி மூஞ்சை உடைத்து விடுவேன் என, கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் வர்மாவின் பேச்சுக்கு பவா, விஷ்ணு போன்ற பலர் தங்களின் எதிர்ப்பையும் தெரிவித்தனர். பின்னர் அதுவே ஒரு பிரச்சனையாகவும் மாறியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த பிரச்னையை இன்று விசாரிக்கும் கமல்ஹாசன், விஜய் வர்மா கூறிய விஷயத்தை அச்சு பிறழாமல் செய்து காட்டினார். இதனை விஜய் வர்மா மறுக்க வர, குறும்படம் போட்டு காட்டுவேன் என எச்சரித்த கமல், பின்னர்... அவரின் வன்முறை பேச்சை கண்டித்தது மட்டும் இன்றி, STRIKE என்று எழுதப்பட்ட மஞ்சள் நிற கார்டு ஒன்றை காட்டி , என்னிடம் இருந்து மூன்று முறை இதனை பெற்றால் நான் நிற்கும் இந்த இடத்திற்கு வந்து என்னிடம் பேசி விட்டு ஜாலியா வீட்டுக்கு போகலாம் என கூறுகிறார். இந்த புரோமோ தற்போது வெளியாகி போட்டியாளர்களுக்கு பயம்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
of
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/sFud2xx2Bb