பிரதீப் ஆண்டனியை பார்த்து, அனைத்து போட்டியாளர்கள் மத்தியில்... கேப்டன் விஜய் வர்மா, மூஞ்சை உடைத்து விடுவேன் என கூறிய புரோமோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒரு வாரத்திற்கு பின்னர் தான்... போட்டியாளர்கள் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவருமே, மிகவும் கோபமாகவும், ஆக்ரோஷமாகவும் முதல் வாரத்திலேயே மோதி கொள்வது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியடைய ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் இந்த முறை, பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் சிலர், அடிதடியில் இறங்கி... ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாக இன்றயை புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் கோபப்பட்டாலும், சண்டை போட்டாலும்... அவர்களை சமாதானம் செய்து, அரவணைத்து கொண்டு செல்லும் பொறுப்பு கேப்டனுக்கு உள்ளது. ஆனால் இந்த முறை அவரே, அடி தடியில் இறங்கி விடுவேன்... மூஞ்சை உடைத்து விடுவேன் என பேசியிருப்பது தான், பிக்பாஸ் ரசிகர்களை கோவத்தில் கொந்தளிக்க வைத்துள்ளது. கண்டிப்பாக இதுகுறித்து, ஆண்டவர் இந்த வாரம் கேள்வி எழுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதையும் பார்க்க முடிகிறது.
தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், "பிரதீப் என் மேல... ஷு-வை இடிச்சிட்டு போனாரு, எனக்கு திடீர் என்று கோவம் வந்துவிடும், நான் திடீர் என மூஞ்சை உடைத்து விடுவேன் என சைகை மூலம் செய்து காட்டினார். பின்னர் என் மேல் மிகவும் பாசமான பசங்கள் எல்லாம் வெளில இருக்காங்க, எனவே நீங்க வெளியில போன உங்களை அடித்து துவைத்து விடுவார்கள் என கையை கட்டி கொஞ்சம் ஓவராக பேசுகிறார்.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பவா செல்லத்துரை... விஜய் சொல்வது சரி தான் என யாரையாவது சொல்ல சொல்லுங்கள் என தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கிறார். இதை தொடர்ந்து, விஷ்ணு.. விஜய்யை நேருக்கு நேராக பார்த்து, நான் இங்க நிற்கிறேன் உன்னால் முடிந்தால் என்னை அடி என கூறுகிறார். அதற்க்கு விஜய் வர்மா, நீ செருப்பால தட்டி பாரு ஃபர்ஸ்ட் என கூறுகிறார். இதை தொடர்ந்து எழுந்து பேசும் பிரதீப் ஆண்டனி, நான் வந்து எல்லாரையும் அடிக்க தான் போகிறேன் என கூறி வான்டடாக வாயை விட்டு சிக்குகிறார். பின்னர் பெரிய வாக்குவாதே பிக்பாஸ் வீட்டில் நடக்கிறது. இந்த புரோமோவை பார்த்து நெட்டிசன்கள் பலர், கண்டிப்பாக இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் மிகப்பெரிய அடிதடியே நடந்தாலும்... ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கூறி வருகிறார்கள்.
of
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/HQW4MYxuZF