பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி ஒரு வாரம் கூட இன்னும் ஆகாத நிலையில், போட்டியாளர்கள் அதற்குள் முட்டி மோதி கொள்வதை பார்க்கமுடிகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள புரோமோ இதோ..
பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1-ஆம் தேதி துவங்கிய நிலையில், இன்றைய சுவாரஸ்யமான டாஸ்கால் போட்டியாளர்களுக்கு இடையே பிரச்சனையை பற்றி எரிய வைத்துள்ளார் பிக்பாஸ். முதல் புரமோவில், காரசாரமாக விஷ்ணு மற்றும் மாயா விவாதம் செய்யும் காட்சியும், இரண்டாவது புரோமோவில் பூர்ணிமா ரவியுடன் விஷ்ணு சண்டை போடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் போட்டியாளர்களுக்கு இடையே டிபேட் ஷோ நடக்கிறது. மாயா கிருஷ்ணன் நான் கமல் சாருடனே நடித்திருக்கிறேன் என்று கூற, அதற்கு விஷ்ணு ’இவங்க எப்படி இதனை லட்சம் வியூவெர்ஸ் இருக்காங்க என்பதை... எப்படி கெத்தா சொல்றாங்க என்று எனக்கு பயங்கர டவுட்டாக இருக்கிறது’ என்று கூறுகிறார்.
of
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/H93VgyoaIy
இதை தொடர்ந்து பிரதீப் என்ற ஒரு சக போட்டியாளரின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காமல் இருக்கிறார் என்று மாயா மீது குற்றச்சாட்டு ஒன்றை விஷ்ணு முன்வைக்க, அதற்கு மாயா கிருஷ்ணன் ’அவர் என்ன என் மாமனா மச்சான மதிப்பு கொடுக்குறதுக்கு என்று பதிலடி தருகிறார். இந்த காட்சியை நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் பிரதீப், தனது கருத்து தெரிவிக்கிறார். பின்னர் அவங்கள எப்படி நீங்க பிரைன் வாஷ் பண்ணலாம் என்றும், கூறுகிறார் விஷ்ணு. இந்த கடுமையான விவாதம் குறித்து, விஷ்ணுவிடம் கருத்து கூறும் விசித்ரா... 'நீ ரொம்ப பர்சனலாக நிறைய பேர இழுத்து பேசுற, என கூறியதும் விஷ்ணு மிகவும் அதிர்ச்சியாக பார்க்கிறார்.
Jayadevi Passed Away: இயக்குனர் வேலு பிரபாகரனின் முன்னாள் மனைவியும் - நடிகையுமான ஜெயதேவி காலமானார்!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதை தொடர்ந்து, வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவிலும்... விஷ்ணு தான் இடம் பிடித்துள்ளார். பூர்ணிமா ரவி - கூல் சுரேஷ் இடையே டிபேட் நடக்கிறது. இதில் கூல் சுரேஷ் ஒரு மேடை பேச்சாளர் போல் பேசிக்கொண்டே செல்கிறார். என தனக்கு இந்த டாஸ்க் பற்றி உள்ள புரிதலை கூறுகிறார் பூர்ணிமா. இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர், விஷ்ணுவை பார்த்து பேச வரும் பூர்ணிமா ரவி, வார்த்தையை கொஞ்சம் பார்த்து பேசுங்கள் என கூற, இருவருக்குள்ளும் ஒரு விவாதமே நடக்கிறது. பின்னர், சண்டை போட வேண்டாம் என மிகவும் கோவமாக அந்த இடத்தில் இருந்து செல்கிறார். முதல் வாரத்திலேயே விஷ்ணு டார்கெட் செய்யப்படுகிறாரா? என்கிற சந்தேகம் ஒருபுறம் ரசிகர்களுக்கு இருந்தாலும்... மூன்றே நாளில் இப்படி பிரச்சனை பற்றி கொண்டு எரிகிறதே என கமெண்ட் மூலம் தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.
of
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/OCO9yqvk2w