பிக்பாஸ் 7 எவிக்‌ஷன்.. அதிக வாக்குகள் பெற்ற ரவீனா.. டேஞ்சர் ஸோனில் இருக்கும் 2 பேர் யார் தெரியுமா?

By Ramya s  |  First Published Oct 3, 2023, 9:35 AM IST

இந்த முறை பிக்பாஸ் வீட்டில் 2 நாமினேஷன் நடைபெற்றது. பிக்பாஸ் வீடு மற்றும் சின்ன பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தனித்தனியே நாமினேட் செய்தனர்.


தமிழ் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. 2 பிக்பாஸ் வீடு, கேப்டனுக்கு அதிக பவர் என பல்வேறு புதிய மாற்றங்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 6 சீசன்களை போலவே இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்த முறை கூல் சுரேஷ், பிரதீப், ரவீனா தாஹா, பூர்ணிமா ரவி, நிக்ஸன், வினுஷா, மணி சந்திரா, அக்‌ஷ்யா, ஜோவிகா, மாயா, யுகேந்திரன், விஷ்ணு விஜய், சரவணன் எழுத்தாளர் பவா செல்லதுரை, நடிகை விசித்ரா, அனன்யா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாளிலேயே தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் பிக்பாஸ். வீட்டிற்கு முதலில் வந்தவர் தான் தலைவர் என்றும், அடுத்தடுத்து வரும் போட்டியாளர்களுடன் வாக்குவாதம் செய்து தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று டாஸ்க் கொடுத்தார். அதன்படி கடைசியாக வந்த விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆனார்.

Tap to resize

Latest Videos

மேலும் நேற்றைய தினம், தலைவரை குறைவாக கவர்ந்த 6 பேர் மற்றொரு Small Boss வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஐஷு, வினுஷா, நிக்ஸன், ரவீனா, பவா செல்லதுரை, அனன்யா ஆகிய இந்த 6 பேரும் தான் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் சமைக்க வேண்டும் என பல விதிகள் அறிவிக்கப்பட்டது. இந்த வாரத்திற்கான நாமினேஷனும் நேற்று நடைபெற்றது. வழக்கமாக முதல் வாரம் நாமினேஷன் இருக்காது. ஆனால் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் 2 நாமினேஷன் நடைபெற்றது. பிக்பாஸ் வீடு மற்றும் சின்ன பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தனித்தனியே நாமினேட் செய்தனர்.

 

ரூல்ஸை மீறிய விசித்ரா மற்றும் யுகேந்திரன்... அதிரடியாக வீட்டை விட்டு வெளியேற்றிய பிக்பாஸ் - ஷாக்கிங் புரோமோ

அதன்படி ஐஷு, அனன்யா, ரவீனா, யுகேந்திரன், பிரதீப் மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். நாமினேஷன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் யார் என்பது பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன. இதில் ரவீனா தற்போது வரை 29.76% வாக்குகளுடன் அதிகபட்ச வாக்குகளைப் பெற்று வருகிறார். இவரைத் தொடர்ந்து முறையே ஐஷு, பவா செல்லதுரை மற்றும் ஜோவிகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் பிரதீப் ஆண்டனி மற்றும் யுகேந்திரன் ஆகியோர் கடைசி 2 இடங்களில் உள்ளனர். பிரதீப் 6.98% வாக்குகளையும், யுகேந்தரன் 6.67% வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அக்டோபர் 3 ஆம் தேதி நள்ளிரவில் வாக்குப்பதிவு முடிவடையும் என்று கூறப்படுகிறது, தற்போதைய நிலவரப்படி பார்த்தால் யுகேந்திரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளராக மாறுவார் என்று தெரிகிறது. எனினும் வரும் நாட்களில் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை பொறுத்தே இது மாறும். எனவே பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் வெளியேறும் முதல் நபர் யார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரியவரும்.

click me!