உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் இதுவரை 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களம் இறங்கியுள்ளனர். இன்னும் நான்கு போட்டியாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக பல சின்னத்திரை நடிகர், நடிகைகள் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்கின்ற சீரியல் மூலமாக தனது கலை பயணத்தை துவங்கிய விஷ்ணு விஜய் தற்பொழுது போட்டியாளராக களம் இறங்கியுள்ளார்.
யார் இந்த விஷ்ணு விஜய்?
நடிகர் விஷ்ணு விஜய் எலக்ட்ரானிக் மீடியா படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர், சிறு வயது முதலிலேயே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை நாடகத்தில் இவர் நடிக்க துவங்கினார்.
அதன்பிறகு இன்றளவும் தொடர்ச்சியாக சுமார் 11 ஆண்டுகளாக பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்த வரும் நடிகர் விஷ்ணு விஜய், கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல நடிகர் விமல் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை சிங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் களமிறங்கினார்.
அதன் பிறகு "இவன் யார் என்று தெரிகிறதா" என்ற திரைப்படத்தில் இவர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்த நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதுவரை ஐந்து திரைப்படங்களில் நடித்துள்ள விஷ்ணு விஜய் "சிவப்பு சேவல்" என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர் விஷ்ணு விஜய் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்துள்ளது அவருடைய ரகசியங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சோசியல் மீடியா பிரபலம்.. இளம் வயதிலேயே அன்னைக்கு நிகரான புகழ் - யார் இந்த ஜோவிகா வனிதா விஜயகுமார்?