தனக்கு சிறு வயதிலிருந்தே படிப்பு வராததால் 9-ம் வகுப்பு வரை மட்டுமே ஜோவிகா படித்ததாகவும், நடிப்பின் மீது இருந்த ஆசையால் நடிப்பை கற்றுக்கொண்டு வருவதாக சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
விஜயகுமார் - மஞ்சுளா நட்சத்திர தம்பதியின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான வனிதா விஜயகுமார் தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார் வனிதா. பின்னர் பல சீரியல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். மேலும் சமீபத்தில் அவர் 3-வது திருமணம் செய்து கொண்டது, பின்னர் பிரிந்தது என தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார் வனிதா.
இந்த நிலையில் வனிதாவின் மகள் ஜோவிகா தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். தற்போது 18 வயதே ஆகும் ஜோவிகா தான் இந்த பிக்பாஸ் சீசனின் இளவயது போட்டியாளர் ஆவார். தனக்கு சிறு வயதிலிருந்தே படிப்பு வராததால் 9-ம் வகுப்பு வரை மட்டுமே ஜோவிகா படித்ததாகவும், நடிப்பின் மீது இருந்த ஆசையால் நடிப்பை கற்றுக்கொண்டு வருவதாக சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். ஆனால் படிப்பு முக்கியம், ஒரு டிகிரியாவது வாங்க வேண்டும் என்று சக போட்டியாளர்களான விசித்ரா, யுகேந்திரன் கூறிய போது இதை பற்றி அதிகம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் ஜோவிகாவுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உருவாகி வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில் தனது மகள் ஜோவிகா குறித்து வனிதா பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.. ஜோவிகாவுக்கு படிப்பு வரவில்லை என்றாலும், அவருக்கு நிறைய திறமைகள் இருப்பதாக வனிதா தெரிவித்துள்ளார். நடிகையாக வேண்டும் என்ற தனது மகளின் கனவுக்கு எந்த தடையும் போடவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் “ ஜோவிகா நடிப்பு பயிற்சியில் டிப்ளமோ படித்துள்ளார். மேலும் ஜோவிகாவுக்கு திரைப்பட இயக்கம் பற்றி கற்றுக்கொள்ள அவரை இயக்குனர் பார்த்திபனிடம் வனிதா சேர்த்துவிட்டேன். இதை தொடர்ந்து ஒரு படம் முழுவதுமே எடிட்டிங் தொடங்கி பல டெக்னிக்கல் பணிகளை கற்றுக்கொண்ட ஜோவிகா உதவி இயக்குனராக பணிபுரிந்தார். .
தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளதால், எப்போது திரும்பி வந்தாலும் தன்னிடம் மீண்டும் பணிபுரியலாம் என்று கூறியுள்ளார். மேலும் திரைத்துறையில் தொழில்நுட்பம் சார்ந்த சில படிப்புகளையும் ஜோவிகா படித்துள்ளார். இதனால் தான் பிக்பாஸ் தொடக்க நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ஜோவிகா டெக்னீசியன் என்று அழைத்தார்” என்று கூறியுள்ளார். மேலும் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை, குழந்தைகளுக்கு என்ன திறமை இருக்கிறதோ அவர்களை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளின் கனவுகளுக்கு பெற்றோர் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே பள்ளி படிப்பை முடிக்கவில்லை என்றாலும், பல திறமைகளை வளர்த்து வரும் ஜோவிகாவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.