வனிதாவின் மகள் ஜோவிகா மிகவும் எமோஷ்னலாக பிக்பாஸ் வீட்டில் நடந்த டிபேட்டின் போது பேசிய விஷயத்தை கேட்டு மற்ற ஹவுஸ் மேட்ஸ், கட்டித்தட்டி வரவேற்றுள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 'பிக்பாஸ் சீசன் 7' நிகழ்ச்சி, அக்டோபர் 1-ஆம் தேதி துவங்கியது. பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் என இரண்டு வீட்டுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தி, பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக அடியெடுத்து வைத்துள்ளனர்.
இவர்களில் மிகவும் இளம் வயது போட்டியாளர் என்றால், அது வனிதாவின் மகள் ஜோவிகா தான். பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்லும் போதே, எனக்கு படிப்பு ஏறவில்லை, அம்மாவும் முடிந்தவரை என்னை படிக்கவைக்க முயற்சி செய்தார். ஆனால் என்னால் அதில் கான்செண்ட்ரேட் செய்யமுடியவில்லை. பின்னர் எனக்கு நடிப்பதில் ஆர்வம் உள்ளதாக கூறிய பின்னர் அம்மாவும் நான் நடிகையாக தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்தார் என கூறியிருந்தார்.
ஒரு பிரபலத்தின் மகளாக இருந்தும், "நான் அப்படி... இப்படி என அளப்பறையை செய்து கொள்ளாமல், இது தான் உண்மை என ஜோவிகா தன்னை பற்றி கூறியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து யுகேந்திரன் மற்றும் விசித்ரா ஆகியோர் படிப்பு குறித்து ஜோவிகாவிடம் பேசிய போதும்... அவர்கள் மனம் கஷ்டப்படாத மாதிரி வேறு ஏதாவது பேசலாம் என அந்த டாப்பிக்கை டைவேட் செய்தார். ஜோவிகாவின் விளையாட்டை பார்த்து பலர், அம்மா வனிதா மாதிரி இல்லாமல்... மிகவும் புத்திசாலித்தனமாகவும் நேர்மையாகவும் ஜோவிகா விளையாடுவதாக தங்களின் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து ஜோவிகா கண் கலங்கி கூறிய ஒரு விஷயத்தை மற்ற போட்டியாளர்கள் கை தட்டி பாராட்டியுள்ளனர். டிபேட் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு, ’நான் ஒரு விஷயத்தை சொல்ல விருப்பப்படுகிறேன். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு நாட்களில் எனக்கு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், ஏற்கனவே என் பள்ளி அனுபவங்களை உங்களிடம் சொல்லி இருக்கிறேன். நான் சில டிபேட்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் என்னை யாரும் கலந்துகொள்ள விடவில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இப்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததால், அந்த திறமையை எனக்கு இருக்கிறது என்று இப்போதுதான் எனக்கே தெரிகிறது’. என்று அழுது கொண்டே கூற... அங்கிருக்கும் சக போட்டியாளர்கள் அவரை கைதட்டி உச்சாகப்படுத்தி தங்களின் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Jovika is happy to finally realize her abilities and to start winning in life. pic.twitter.com/vGYIZEtnfL
— Bigg Boss Follower (@BBFollower7)