Bigg Boss Promo: உனக்கு வரலையா மூடிக்கிட்டு உக்காரு..! பிரதீப் - நிக்சன் இடையே வெடித்த பயங்கர மோதல்..!

By manimegalai a  |  First Published Oct 11, 2023, 11:55 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்றைய முதல் ப்ரோமோவிலேயே, பிரதீப் மற்றும் நிக்ஸன் இடையே வெடித்த மோதல் குறித்த காட்சிதான் வெளியாகி உள்ளது.
 


உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் துவங்கிய நிலையில், முதல் வாரத்திலேயே நாமினேஷன் படலம் துவங்கியது. முதல் போட்டியாளராக அனன்யா ராவ் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து, பவா செல்லதுரை தன்னுடைய உடல் நலனை காரணம் காட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக கூறினார். பின்னர் பிக் பாஸ் தரப்பில் இருந்து இவரிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், கடைசியில் உடல்நிலை காரணமாக அவரை வெளியேற்றுவதாக பிக் பாஸும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர்கள் முட்டி மோதிக் கொண்டு தங்களுடைய விளையாட்டை வெளிப்படுத்தி, ரசிகர்களைத் கவர முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆறு சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வெடித்து வருகிறது.  ஒரு வீடாக இருக்கும் போதே பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படும் நிலையில்,  இரண்டு வீடு என்றால் சொல்லவா வேண்டும்?. இரண்டு குழுவாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்வது மட்டுமின்றி, போட்டி பொறாமையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நேற்றைய தினம் பாத்ரூம் மற்றும் ஹவுஸ் கிளீனிங் அணிகள் தேர்வு செய்ய போட்டி நடைபெற்றது,  இதில் விஜய் மற்றும் அக்ஷயா இடையே நடந்த போட்டியில் ஸ்மால் பாக்ஸ் வீட்டைச் சேர்ந்த விஜய் வெற்றி பெற்றார். அதேபோல் ஐஷு மற்றும் வினுஷா இடையே நடந்த போட்டியிலும், ஐஸ் வெற்றி பெற்றார். எனவே இந்த முறை ஸ்மால் பாஸ் அணியினர் பாத்ரூம் கிளீனிங் மற்றும் ஹவுஸ் கிளீனிங் வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம், சமையல் செய்வது ஸ்மூத்தாக சென்ற நிலையில் இந்த முறை பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில், அமைதியான போட்டியாளராக பார்க்கப்பட்ட நிக்சன் தன்னுடைய கோப முகத்தை வெளிக்காட்டியுள்ளார்.

விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் 5 வருட பயணம் முடிவுக்கு வந்தது! உறுதி செய்த புகைப்படம்!

நிக்சனை பார்த்து பிரதீப் உனக்கு பேச தகுதியில்லை உட்காரு என கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து கடுப்பான நிக்ஸன், பிரதீப்பிடம் வந்து இதுகுறித்து கேட்டு சண்டை போடுகிறார். பின்னர் நீங்க யாரு முதல்ல... நான் உழைச்சு, பாட்டு பாடி, என்னுடைய திறமையை நிரூபித்து உள்ளே வந்துள்ளேன். என்னை பார்த்து தகுதி இல்லன்னு சொல்ல உனக்கு தகுதியே இல்லை என பேசுகிறார். வெளியே இருந்து பக்காவாக இந்த கேம்மை புரிந்து கொண்டு ஸ்டேட்டர்ஜியுடன் நீங்க விளையாடலாம். ஆனா இப்படி ஒரு கேவலமான ஸ்டேட்டர்ஜிய பயன்படுத்தி ஜெயிக்கணும்னு எனக்கு அவசியமே இல்லை. உன் கிட்ட திறமை இல்லை.. என்கிட்ட திறமை இருக்கு.. எனவே பாடி காட்டு, ஆடி காட்டலாம் பேசாத உனக்கு வரலையா மூடிக்கிட்டு உட்காரு என பொங்கி எழுந்துள்ளார்.

of

Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/0xTRR5Q9Cx

— Vijay Television (@vijaytelevision)

 

click me!