
புத்தக வாசிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் சிறு வயது முதலிலேயே பல புத்தகங்களை படிக்க துவங்கிய பாபா செல்லதுரை அவர்கள் திருவண்ணாமலையில் வசித்து வந்த பொழுது, தன்னுடைய நண்பர்கள் சிலருடன் ஒன்றிணைத்து புத்தக வாசிப்பு குழு ஒன்றை ஆரம்பித்தார். இப்போது சுமார் 500 பேர் கொண்ட இந்த குழு, ஒரு பிரபலமான புத்தக வாசிப்பு குழுவாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
61 வயது நிரம்பியுள்ள பாவா செல்லதுரை அவர்கள், "எல்லா நாளும் கார்த்திகை", டொமினிக் உள்ளிட்ட ஏழு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவியின் பூலோகம், குரு சோமசுந்தரத்தின் ஜோக்கர், மக்கள் செல்வனின் சீதக்காதி, மம்மூட்டியின் பேரன்பு உள்ளிட்ட பல நல்ல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
அண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இவர் களமிறங்கிய நிலையில், நிகழ்ச்சி துவங்கிய 10 நாளுக்குள்ளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து இவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிரபல நடிகை ரேகா நாயர் அவர்கள், பாவா செல்லதுரை குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
"பாவா பரபரப்பாக இயங்கக்கூடிய மனிதர், அவரால் 5 நிமிடத்திற்கு மேல் ஓரிடத்தில் அமர்ந்து பேச முடியாது. ஒருவேளை பிரதமரோடு அமர்ந்து பேசுவதற்கான வாய்ப்பு செல்லதுரைக்கு கிடைத்தாலும் கூட, அவரால் பிரதமருடன் 5 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்து பேச முடியாது. நான் அவரை பல பெரிய மனிதர்களோடு அமைந்து பேசுவதை கண்டிருக்கிறேன், எங்கு சென்றாலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் உட்கார மாட்டார்".
"பரபரப்பாகவே இயங்கும் ஒரு மனிதர் அவர், பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் நூறு நாட்கள் தங்கப் போகிறார் என்று தனக்கு தெரியவில்லை என்று அவர் கூறியிருந்தார்". ரேகா நாயர் பேட்டியில் இந்த விஷயத்தை பேசிய வெகு சில நாட்களில் பாபா செல்லதுரை அவர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து தானாக முன்வந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.