Veera Dheera Sooran Part 2 Movie 15 Minutes Single Shot Scene : விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் வீர தீர சூரன் படத்தில் 10 நிமிட சிங்கிள் ஷாட் காட்சிக்கு 10 நாள் படப்பிடிப்பு நடந்துள்ளதாக இயக்குநர் கூறியுள்ளார்.
Veera Dheera Sooran Part 2 Movie 15 Minutes Single Shot Scene : தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம். சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் தோல்வி படங்களை கொடுத்து வந்த விக்ரமுக்கு 1999 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சேது படம் தான் திருப்பு முனையாக அமைந்தது. இந்தப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். பாலாவின் முதல் படம். இந்தப் படம் வெளியான போது திரையரங்குகளில் அந்தளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இல்லை. படம் வெளியாகி முதல் ஷோ முடிந்த பிறகு தான் இந்தப் படத்தைப் பற்றிய பேச்சு பட்டி தொட்டியெங்கும் பரவியைத் தொடர்ந்து ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.
பிக் பாஸ் 8ல் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படும் போட்டியாளர் அவரு இல்லையாம், இவராம்!
undefined
சிறந்த தமிழ் படத்திற்காக சேது படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு கண்களில் கண்ணீரே வந்துவிடும். அந்தளவிற்கு காட்சியும், கதையும் இருந்தது. கிளைமேக்ஸில் தான் டுவிஸ்ட் கொடுத்திருந்தார்.பெரும்பாலும் பாலாவின் படங்கள் கிளைமேக்ஸ் டுவிஸ்டோடு தான் திரைக்கு வருகிறது. சேது படத்தை போன்று பிதாமகன் படமும் விக்ரமுக்கு பேரும், புகழும் பெற்றுக் கொடுத்தது.
பிதாமகன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை விக்ரமுக்கு பெற்றுக் கொடுத்தது. அந்நியன், ராவணன், தெய்வ திருமகள், தாண்டவம், இரு முகன் என்று பல ஹிட் படங்களை கொடுத்தார். இதையடுத்து ஒரு சில தோல்விகளை கொடுக்கவே பொன்னியின் செல்வன் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 படங்கள் மீண்டும் விக்ரமுக்கு ஹிட் கொடுத்தது. இதே போன்று தான் இந்த ஆண்டு திரைக்கு வந்த தங்கலான் படமும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் விக்ரமுக்கு ஹிட் படமாக அமைந்தது.
ஸ்கூல்ல டேட் பண்ணக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் – அதிதி பாலன்!
அதோடு சிறந்த வரலாற்று படமான தங்கலான் படத்தில் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடிந்திருந்தார். இந்தப் படத்திற்காக அவரது கடின உழைப்பை பார்க்கும் போது சிறந்த நடிகருக்கான தேடிய விருது கூட கிடைக்கலாம் என்று சொல்லப்பட்டது. அந்தளவிற்கு அவரது நடிப்பு இந்தப் படத்தில் இருந்தது. இப்போது, வீர தீர சூரன் பார்ட் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் எஸ் யு அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ் ஜே சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், சித்திக், பவல் நவகீதன் ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்த படத்தில் விக்ரம் காளி என்ற ரோலில் நடித்துள்ளார். அவரது மனைவியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
796CC படத்தில் சூர்யா: மாருதி கார்களின் எஞ்சின் உருவான விதம் தான் கதையா?
ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சினிமா வரலாற்றில் முதல் முறையாக வீர தீர சூரன் படத்தின் 2ஆவது பாகம் திரைக்கு வர இருக்கிறது. அதுவும், வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்ளீ படம் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு போட்டியாக வணங்கான் படமும் திரைக்கு வர இருக்கிறது.
இந்தப் படத்திற்கு போட்டியாக அல்லது குடியரசு தின நாளில் கூட வீர தீர சூரன் படம் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குநர் எஸ் யு அருண் குமார் முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வீர தீர சூரன் படத்தில் 15 நிமிடங்களுக்கு சிங்கிள் ஷாட் சீன் ஒன்று இருக்கிறது. அந்த ஷாட் எடுக்க எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.
அதற்காக தனியாக செட் போட்டு, நடிகர்கள், நடிகைகள் வருவதற்கு முன்பு அசிஸ்டண்ட் இயக்குநர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்களை வைத்து ரிகர்ஷல் பார்த்தோம். அதன் பிறகு நடிகர்களை வைத்து மீண்டும் ரிகர்ஷல் பார்த்தோம். இதையடுத்து தான் படப்பிடிப்பு எடுத்தோம். ஆனால், எடுத்து முடிக்க 10 நாட்கள் ஆயிருச்சு. எங்களுக்கு நாங்கள் நினைத்த மாதிரியே சீன் கிடைச்சிருக்கு. அந்த காட்சியை திரையில் பார்க்கும் போது ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
காளியாக நடித்துள்ள விக்ரம் ஒரு புரோவிஷன் ஸ்டோர் ஓனர். அன்பான கணவன் மற்றும் அப்பாவைச் சுற்றி கதை நகர்கிறது. அவர், மறைமுகமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதும், மர்மமாக பார்க்கும் வேலையும் தான் படத்தின் கதை. இந்தக் கதை ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.