மன்னித்துவிடுங்கள்; வருத்தத்தோடு விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கை!

By manimegalai a  |  First Published Dec 28, 2024, 1:43 PM IST

 நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி, அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அப்செட் செய்துள்ளார்.
 


இசையமைப்பாளராக அறிமுகமாகி, நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. 2005 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான 'சுக்கிரன்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய இசையால் கவர்ந்த விஜய் ஆண்டனி, இந்த படத்தை தொடர்ந்து டிஷ்யூம், இருவர் மட்டும், நான் அவன் இல்லை, பந்தயம், காதலில் விழுந்தேன், உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.

சமீப காலமாக, தான் நடிக்கும் சில படங்களுக்கு மட்டுமே இசையமைப்பாளராக பணியாற்றும் விஜய் ஆண்டனி, முழு நேர நடிகராக மாறிவிட்டார். அதன்படி 'நான்' திரைப்படத்தின் மூலம் 2012 ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனிக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. இவருடைய சைலன்ட்டான நடிப்பு ரசிகர்களை கவனிக்க வைத்தது. அடுத்தடுத்து நடித்த சலீம், இந்தியா பாக்கிஸ்தான், போன்ற படங்கள் சற்று சாறுகளை சந்தித்தாலும், 'பிச்சைக்காரன்' திரைப்படம் இவருக்கு இண்டஸ்ட்ரியன் ஹிட்டாக அமைந்தது.

Tap to resize

Latest Videos

undefined

குறிப்பாக தமிழை விட தெலுங்கில் தான் சக்க போடு போட்டது. இதன் பின்னரே கடந்த ஆண்டு 'பிச்சைக்காரன் 2' படத்தை விஜய் ஆண்டனி இயக்கி அதில் நடித்தும் இருந்தார். இந்த படமும் முதலுக்கு மோசம் இல்லாத வகையில் விஜய் ஆண்டனியை காப்பாற்றியது.

மேலும் இந்த ஆண்டு மட்டும், விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர், என மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியானது. ஆனால் மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில்... தற்போது கங்கன மார்கன் மற்றும் அக்னி சிறகுகள் என இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார்.

2024- வில்லன் நடிப்பில் மிரட்டிய 5 நடிகர்கள்! யார் யார் தெரியுமா?

விஜய் ஆண்டனி ஒரு இசையமைப்பாளர் என்பதை நினைவு படுத்தும் விதத்தில், கடந்த ஓரிரு வருடமாக ஏ ஆர் ரகுமான், ஜிவி பிரகாஷ், இளையராஜா பாணியில் லைவ் கான்செர்ட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஏற்கனவே இவர் நடத்திய நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இன்று விஜய் ஆண்டனி 3.0 லைவ் கான்செப்ட் சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது அந்த நிகழ்ச்சியை வேறு ஒரு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பப்பில் செம்ம வைப் மோடில் வனிதா விஜயகுமார்; ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி போட்டோஸ்!

இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, "வணக்கம் நண்பர்களே..  சில எதிர்பாராத காரணங்களாலும், தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் பேரில் இன்று நடக்க இருந்த விஜய் ஆண்டனி 3.0 லைவ் கான்செர்ட் வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். புதிய நிகழ்வின் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி.. புதிய நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக இருக்கும் என இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!