பிக் பாஸ் 8ல் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படும் போட்டியாளர் அவரு இல்லையாம், இவராம்!

By Rsiva kumar  |  First Published Dec 28, 2024, 12:14 PM IST

Manjari Narayanan is Likely to Eliminated from Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படும் போட்டியாளர் யார் என்ற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.


Manjari Narayanan is Likely to Eliminated from Bigg Boss Tamil Season 8 : கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். வைல்டு கார்டு எண்ட்ரி என்று இந்நிகழ்ச்சியில் மொத்தமாக 24 போட்டியாளர்கள் இடம் பெற்றனர். இந்நிகழ்ச்சி ஆண்கள் vs பெண்கள் அணியாக களத்தில் இறங்கியது. ஆனால், சுவாரஸ்யம் இல்லாத நிலையில் ஆண்கள் vs பெண்களுக்கு பிக் பாஸ் எண்டு கட்டினார். அதன் பிறகு தான் பிக் பாஸ் வீட்டிற்குள் செண்டிமெண்ட், காதல், சண்டை காட்சிகள் என்று பிக் பாஸ் வீடே சூடு பிடிக்க தொடங்கியது.

ஸ்கூல்ல டேட் பண்ணக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் – அதிதி பாலன்!

Tap to resize

Latest Videos

undefined

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது 12ஆவது வார முடிவில் இருக்கிறது. 82 நாட்களை கடந்த இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. இதில் பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்த வண்ணம் இருந்தனர். தீபக்கின் குடும்பத்தினர் முதல் முத்துக்குமரனின் குடும்பத்தினர் வரை எல்லா போட்டியாளர்களின் குடும்பத்தினரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.

இதில் வைல்டு கார்டு மூலமாக வந்த மஞ்சரியின் குடும்பத்தினரும் இடம் பெற்றிருந்தனர். இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் விஷால், மஞ்சரி, ஜெஃப்ரி, ராணவ், அன்ஷிதா, ஜாக்குலின், பவித்ரா ஆகிய 7 பேர் இடம் பெற்றிருந்தனர். இதில் எந்த போட்டியாளர் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் எழுந்தது.

59 வயதில் 3ஆவது டிகிரி – ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸான நடிகர் முத்துக்காளை M.A , B. Lit!

எனினும் மஞ்சரி மற்றும் அன்ஷிதா ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. விக்கிப்பீடியா பக்கத்திலும் இந்த இருவரது பெயரும் எலிமினேஷனுக்கான பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நேற்று மஞ்சரி தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட இருப்பதாக விக்கிபீடியா பக்கத்தில் கூறப்பட்டது. ஆனால், இது உண்மையான தகவலா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், இன்று எவிக்‌ஷன் பட்டியலிலிருந்து மஞ்சரி நீக்கப்பட்டுள்ளார். எனினும் 84ஆவது நாளில் மஞ்சரி மற்றும் அன்ஷிதா ஆகியோரில் யாரேனும் ஒருவர் எலிமினேட் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. ஆனால், வைல்டு கார்டு மூலமாக வந்த மஞ்சரிக்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அவர் பிக் பாஸ் ஆரம்பித்து 28ஆவது நாளில் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். நாளை அவர் வெளியேற்றப்பட்டால் 56 நாட்கள் வீட்டில் இருந்த போட்டியாளராவார்.

796CC படத்தில் சூர்யா: மாருதி கார்களின் எஞ்சின் உருவான விதம் தான் கதையா?

click me!