நடிகர் மற்றும் அரசியல் தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், இவரை பற்றிய சில அரிய தகவல்களை பார்ப்போம்.
கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று, மிகப்பிரமாண்டமான முறையில் குருபூஜையாக அனுசரிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு விஜயகாந்தின் குடும்பத்தினர் பல முக்கிய அரசியல் தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் பலர் கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாளை, பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கி சிறப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனதில், 'அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனாக' வாழ்ந்து கொண்டிருக்கும், விஜயகாந்த் பற்றிய சில அரிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
undefined
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்கிற பெயரோடு பிறந்தவர் தான் விஜயகாந்த். இவருடைய தந்தை ஒரு மில் முதலாளி என்பதால், விஜயகாந்த் நடிப்பின் மீது காட்டிய ஆர்வத்தில், அவருடைய தந்தைக்கு துளியும் விருப்பம் இல்லை. தந்தையின் பேச்சை மீற முடியாமல் இருந்த விஜயகாந்த், பல போராட்டங்களுக்குப் பிறகு தன்னுடைய தந்தையின் அனுமதியோடு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேட துவங்கினார்.
பப்பில் செம்ம வைப் மோடில் வனிதா விஜயகுமார்; ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி போட்டோஸ்!
அதன்படி 1979 ஆம் ஆண்டு வெளியான, இனிக்கும் இளமை என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் விஜயகாந்த். ஆரம்பத்தில் கண்டு கொள்ளப்படாத ஒரு நடிகராக இருந்தாலும், இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது எஸ்ஏசி இயக்கத்தில் வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து ஏராளமான ஹிட் படங்களில் நடிக்க துவங்கினர். குறிப்பாக இவர் நடித்த கேப்டன் பிரபாகரன், வானத்தைப்போல, ரமணா ,சேதுபதி ஐபிஎஸ், தவசி, புலன்விசாரணை, போன்ற படங்கள் இப்போது வரை ஏராளமான ரசிகர்களால் ரசிக்கப்படும் படமாக உள்ளது. சிறந்த நடிகர் என்பதை தாண்டி மனித நேயம் மிக்கவர் என்று மக்களாலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த்.
2024-ஆம் ஆண்டில் பான் இந்தியா அளவில் தோல்வியை தழுவிய திரைப்படங்கள்!
சில முன்னணி நடிகர்கள், தங்களை வைத்து படம் இயக்க ஆசைப்படும் அறிமுக இயக்குனரை நம்பி வாய்ப்புகள் கொடுக்க தயங்குவார்கள். ஆனால் விஜயகாந்த் தன்னுடைய திரைப்படங்கள் மூலம் பல முன்னணி இயக்குனர்களை உருவாக்கியவர். இதுவரை சுமார் 54 அறிமுக இயக்குனர்களை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர். பல இயக்குனர்கள் இயக்கும் படங்களுக்கு தானே தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதேபோல் ஏராளமான தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
இயக்குனரின் கருத்துக்களுக்கு சுதந்திரம் கொடுப்பவர். எந்த ஒரு கட்டத்திலும் இயக்குனரின் கற்பனைக்கோ அல்லது கதையிலோ தன்னுடைய எண்ணங்களை திணிக்க மாட்டார். ஒரு கதையை ஒப்புக் கொண்டு சம்பளத்தை வாங்கி விட்டால், கொடுத்த கால்ஷீட் நேரத்தில் தன்னுடைய பணத்தை நடித்து கொடுப்பதில் தீவிரமாக இருப்பார்.
அதே போல், சமீப காலமாக விஜய், அஜித், அருண் விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் சண்டை காட்சிகளில் டூப் வேண்டாம் என்று சொல்லி, தங்களுடைய முயற்சியால் ஸ்டண்ட் காட்சிகளை மேற்கொள்கின்றனர் . இவர்களுக்கு முன்னோடி விஜயகாந்த் தான் என்பது உங்களுக்கு தெரியுமா? இவர் நடித்த பல ஆக்சன் படங்களில் டூப் போடாமல் நடித்துள்ளார். அதேபோல் சண்டை காட்சிகளில் பறந்து பறந்து அடிக்கும் தனக்கான ஒரு ஸ்டைலை உருவாக்கியவர் விஜயகாந்த். இவருடைய ஆக்சன் காட்சிகளுக்கு கோலிவுட் திரை உலகில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை! தளபதி விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த விஜய பிரபாகரன்!
டூப் போடாமல் விஜயகாந்த் நடிப்பதற்கு, ஒரு பின்னணி கதை உள்ளது. அதாவது 'நாளை உனது நாள்' திரைப்படத்தில், விஜயகாந்த் நடித்த போது அவருக்கு டூப் போட்ட கலைஞர் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாகவும், இந்த சம்பவத்திற்கு பின்னர் என்னுடைய படங்களில் எனக்கான சண்டை காட்சிகளை நானே நடிக்கிறேன் என நடிக்க முடிவு செய்தார். மேலும் சண்டை காட்சிகளுக்காக பிரத்தேயேக பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
1980 மற்றும் 90களில் முன்னணி நடிகராக சக்கை போடு போட்டு வந்த உலகநாயகன் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் அலையில், தனித்து தெரிந்தவர் விஜயகாந்த். சம்பளத்திலும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை விட அதிகமாக பெற்றவர். பெரும்பாலான நடிகர்களுக்கு அவர்களின் நூறாவது படம் தோல்வி படமாக அமைந்துள்ளது. குறிப்பாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் படங்கள். கமலஹாசன் தன்னுடைய நூறாவது படமாக நடித்த ராஜபார்வை தோல்வி அடைந்தது. அதேபோல் ரஜினிகாந்த் தன்னுடைய நூறாவது படமாக நடித்த 'ஸ்ரீ ராகவேந்திரா' திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜயகாந்துக்கு அவருடைய நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வெள்ளி விழா கொண்டாடியது. இந்த படத்தில் நடித்த முடித்த பின்னரே விஜயகாந்த் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
திரையுலகில் சாப்பாட்டில் கூட சமத்துவத்தை கொண்டு வந்தவர் விஜயகாந்த். தான் தயாரிப்பாளராக மாறிய பின்னர், 'நான் என்ன உணவு சாப்பிடுகிறேனோ... அதே உணவை தான் செட்டில் உள்ள அடிப்படை ஊழியரும் சாப்பிட வேண்டும் என நினைத்தார்". இதன் பின்னரே பல ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பாட்டில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
அதே போல சினிமா துறையில் விஜயகாந்த் செய்த சாதனைகள் என்றென்றும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. நடிகர் சங்க தலைவராக இருந்தபோது, கடனில் இருந்த நடிகர் சங்கத்தை கலை விழா நடத்தி மீட்டெடுத்தவர் விஜயகாந்த். 2002 ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்சனை உச்சத்தில் இருந்த போது, நீர் தராத கர்நாடகாவுக்கு மின்சாரம் இல்லை என நெய்வேலியில் நடிகர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டு அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார்.
சிறந்த நடிகர், மக்கள் போற்றும் அரசியல்வாதி, நிர்வாக திறமை கொண்ட மனிதர், என பல அடையாளங்கள் இவருக்கு இருந்தாலும் என்றென்றும் மக்களால் மனிதாபிமானமிக்க மனிதராகவே அதிகம் அறியப்படுகிறார். தன்னால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை தன்னுடைய வாழ்நாள் கொள்கையாக வைத்திருந்தவர் விஜயகாந்த். இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் சூர்யா படங்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, எஸ் எஸ் சி தன்னுடைய மகன் திரைப்படங்களில் விஜயகாந்த் நடிக்க வேண்டும் என கேட்ட ஒரே ஒரு வார்த்தைக்காக, கதையை கூட கேட்காமல் செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் நடிக்க சமதித்தார். அதேபோல் சிவகுமாரின் மகன் சூர்யா நடித்த பெரியண்ணா திரைப்படத்தில் நடித்து அந்த படத்தை வெற்றிபெற வைத்தார்.
மருமகள் சோபிதா பற்றி நாகார்ஜூனா கூறிய கருத்து; என்ன சொன்னார் தெரியுமா?
மக்களின் பசியை போக்கி வரும் உன்னத மனிதரான இவரின் கொள்கைகளை, அவரின் கும்பத்தினரும் மேற்கொண்டு வருகிறார்கள். விஜயகாந்தின் நினைவிடத்தில் தினம் தோறும் சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விஜயகாந்தின் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாகக் 2006-ஆம் ஆண்டு முதல் (தேமுதிக கட்சி தொடங்கிய பின்னர்) தொண்டர்கள் மற்றும் கட்சியினர் கடைப்பிடித்து ஏழை எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.