chiyaan vikram : பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக நேற்று மும்பை சென்றிருந்தபோது தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகளை பற்றி நடிகர் விக்ரம் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையில் நேற்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் பிரஸ் மீட்டில் நடிகர் விக்ரம் பேசுகையில் தஞ்சாவூர் பெரிய கோவில் எவ்வாறு கட்டப்பட்டது என்பதை பற்றியும், ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட மேம்பாட்டு பணிகள் பற்றியும் விவரித்தார். அவரின் அந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் கூறியதாவது : “முந்தைய காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் பற்றியும், பண்டைய கால வரலாறு பற்றியும் தெரிந்துகொள்ள நாம் ஆர்வமாக இருக்கிறோம். நாம் எகிப்தில் உள்ள பிரமீடுகள் பற்றி பேசுகிறோம். அதை எப்படி கட்டி இருப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கிறோம். ஆனால் நம் இந்தியாவில் நிறைய கோவில்கள் இருக்கின்றன. அதில் உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் என்றால் அது தஞ்சை பெரிய கோவில் தான்.
சோழர்கள் காலத்தில் அந்த கோவில் கட்டப்பட்டது. ராஜராஜ சோழன் அந்த கோவிலை கட்டினார். உலகத்திலேயே உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் அதுதான். அந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கல் மட்டும் 80 டன் எடை கொண்டது. நமக்கும் பிரமீடுகள் பற்றியும் பைசா கோபுரம் பற்றியும் தெரிகிறது. ஒழுங்காக நிற்காத பைசா கோபுரத்தை நாம் பார்த்து வியப்படைகிறோம், பாராட்டுகிறோம். அதனுடன் செல்ஃபியெல்லாம் எடுக்கிறோம்.
ஆனால் இன்றளவும் திடமாக நிற்கக்கூடிய பழங்கால கோவில்கள் நம் நாட்டில் உள்ளது. தஞ்சை கோவில் பிளாஸ்டர்கள் எதுவும் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது. அந்த காலத்தில் எந்தவித இயந்திரங்களும் இல்லாத நிலையிலும் யானைகள், காளைகள் மற்றும் மனிதர்களின் உதவியுடன் மட்டுமே தஞ்சை கோவிலை கட்டி உள்ளார்கள். பிளாஸ்டர்கள் பயன்படுத்தாமல் கட்டப்படுள்ள அந்த கோவில் 6 பூகம்பங்களை தாங்கி உள்ளது என்றால் நம்ப முடிகிறதா.
இதையும் படியுங்கள்... மாஸாக என்ட்ரி கொடுத்த பொன்னியின் செல்வன் டீம்.. வைரல் போட்டோஸ் இதோ!
அது எப்படி சாத்தியமானது என்றால், அந்த கோவில் சுற்றுச்சுவர், பின்னர் 6 அடி நீளத்துக்கு தாழ்வாரம் அமைத்து அதன்பின்னர் மையப்பகுதியில் கோவிலை கட்டி உள்ளனர். அதனால் தான் அது இத்தனை பூகம்பங்களையும் தாண்டி இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அதுமட்டுமின்றி ராஜராஜ சோழன், அவரது ஆட்சி காலத்தில் 5 ஆயிரம் அணைகளை கட்டி உள்ளார். அந்த காலத்திலேயே நீர் மேலாண்மை ஆணையத்தையும் அவர் வைத்திருந்தார்.
அந்த காலத்தில் பெரும்பாலான ஊர்களுக்கு ஆண்களின் பெயர்களை மட்டும் சூட்டி வந்த நிலையில், பெண்களின் பெயரை சூட்டி மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தார் ராஜ ராஜ சோழன். இலவசமாக மருத்துவமனைகளை கட்டியுள்ளார். இதெல்லாம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இவையெல்லாம் 9-ம் நூற்றாண்டில் நடந்தவை. இதற்கு 500 ஆண்டுகள் கழித்து தான் கொலம்பஸ் அமெரிக்காவையே கண்டுபிடித்தார்.
இதன்மூலம் நாம் எந்த அளவுக்கு பெருமைமிகு கலாச்சாரத்தை கொண்டிருக்கிறோம் என்பதை யோசித்து பார்க்கவே வியப்பாக உள்ளது. இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். வட இந்தியா, தென் இந்தியா என பிரித்து பார்க்க வேண்டாம். நாமெல்லாம் இந்தியர்கள். அதனால் நாம் இவர்களையெல்லாம் கொண்டாட வேண்டும்” என கூறினார். விக்ரமின் இந்த பேச்சைக்கேட்டு வியந்து போன பத்திரிகையாளர்கள், அவருக்கு அரங்கம் அதிர கைதட்டல்களை கொடுத்தனர்.
இதையும் படியுங்கள்... ரிலீசுக்கு முன்பே அமெரிக்காவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்... முன்பதிவு மூலம் மட்டும் இத்தனை கோடி வசூலா?
Right from the bottom of
s heart . No wonder we all love him !
The way he explains about the structure of Tanjore temple - just pure passion ! pic.twitter.com/QtXN1eZ44Q