தற்போது வெள்ளை நிற உள்ளாடையுடன் புகைப்படம் எடுத்து அதனை பகிர்ந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறார் ரம்யா பாண்டியன்.
பிரபல நடிகர் அருண்பாண்டியனின் உறவுக்கார பெண்ணான ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமானவர். இவர் முன்னதாக டம்மி டப்பாசு எனும் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். 2016 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தில் மல்லிகா ரோலில் நடித்து நல்ல பாராட்டுகளை பெற்றிருந்த இவருக்கு விருதுகளும் கிடைத்திருந்தது. இந்த புகழ் மூலமா ஆண் தேவதை படத்தில் ஜெசிக்காகவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சமுத்திரக்கனி மூலம் பெற்றிருந்தார் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் ரம்யா பாண்டியன். ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பையும் பெற்றார்.
இதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியில் ஒன்றான குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் குக்காக பங்கேற்றார். இதில் இரண்டாவது ரன்னர் அப்பாக வந்து மாஸ் காட்டி இருந்தார். புகழுடன் இவரது கூட்டணி ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானது.
மேலும் செய்திகளுக்கு...கவர்ச்சி புயலாய் மாறிய கீர்த்தி சுரேஷ்...கண்களில் அனல் பறக்கும் கிக் போஸ்
தொடர்ந்து கலக்கப்போவது யாரு சீசன் 9 நீதிபதியாக பங்கேற்ற ரம்யா பாண்டியன், பிக்பாஸ் சீசன் நான்கின் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தார். அந்த நிகழ்ச்சிகள் பங்கேற்று மூன்றாவது ரன்னர் அப்பாக வந்திருந்த ரம்யா பாண்டியனின் பர்ஃபார்மன்ஸ் அந்த ஷோவில் பலரையும் கவர்ந்திருந்தது. தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 கொண்டாட்டம், குக் வித் கோமாளி சீசன் 2வில் விருந்தினராக, பிபி ஜோடிகள், பிக் பாஸ் அல்டிமேட் என சின்னத்திரை ஷோக்கள் பலவற்றிலும் பங்கேற்ற ரம்யா பாண்டியன்.
மேலும் செய்திகளுக்கு...வாய்தா பட நடிகையின் தற்கொலையில் திடீர் திருப்பம்.. காதலனுக்கு வலைவீசும் போலீசார்
பின்னர் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இடும்பன்காரன், நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். அதோடு முகிலன் என்னும் வெப் தொடர் மூலம் வெப் சீரிஸிலும் அறிமுகமாகியுள்ள ரம்யா பாண்டியன் தற்போது மேலும் பட வாய்ப்புகளுக்காக பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். முன்னதாக கலர் கலர் உள்ளாடை மட்டும் அணிந்து இவர் எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்டாக்கின. இதற்கெல்லாம் அச்சாணி போட்டது இவரின் புடவை கவர்ச்சி தான். தற்போது வெள்ளை நிற உள்ளாடையுடன் புகைப்படம் எடுத்து அதனை பகிர்ந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறார் ரம்யா பாண்டியன்.