வாரிசுடன் மோத முடிவு செய்த துணிவு...பிரபல தயாரிப்பாளரின் ட்வீட்டால் பரபரப்பு

By Kanmani P  |  First Published Sep 24, 2022, 7:11 PM IST

பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் தனது ட்விட்டரில் "உலகம் முழுவதும் பொங்கல் அன்று துணிவு" என பதிவிட்டுள்ளார். இந்த தற்போது பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.


காலங்காலமாக அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே போர்க்களம் நீண்டு கொண்டு தான் இருக்கிறது. அதற்கு ஏற்ப இருவரின் படங்களும் மோதிக் கொள்வதும் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் தற்போது வாரிசு, துணிவு இடையிலான போர்க்களம் துவங்கிவிட்டது.  வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படம் தடபுடலாக தயாராகி வருகிறது. பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு என குடும்ப செண்டிமெண்ட் படமாக வாரிசு உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் டைட்டில் லுக் 3 முன்னதாக வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது.

விஜயின் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்ட அந்த போஸ்டரை அடுத்து தற்போது படத்தின் முதல் சிங்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விஜயின் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கிறார் தமன். படம் பூவே உனக்காக ஸ்டைலில் இருக்கும் என கூறப்படுவதால் 90கள் விஜயை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...டாப்லெஸ் போஸ்களால் இணையதளத்தை கலங்கடிக்கும் பிக் பாஸ் பிரபலம்..

அதேபோல நேர்கொண்ட பார்வை, வலிமை என இரண்டு படங்களில் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக வினோத் மற்றும் போனி கபூருடன் கைகோர்த்துள்ளார் அஜித். ஆனால் முந்தைய இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றதனால், இந்த படம் கட்டாயம் அதிரடி காட்சிகளை கொண்டு அசத்தும் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.. வங்கி கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட துணிவு படத்தின் அஜித் குமார் இருவேறு வேடங்கள் தரித்தும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மங்காத்தா ஸ்டைலில் அஜித்குமார் எதிர்மறை வேடத்தில் நடிக்கிறாராம். 

மேலும் செய்திகளுக்கு...பைக் வேகத்தால் இளைஞர்களை கவர்ந்த டிடிஎஃப் வாசன்.. 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார்

இதில் அசுரன் நாயகி மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி நடிப்பது சமீபத்தில் உறுதியானது. அதோடு சில நாட்களுக்கு முன்னர் வெளியான படத்தின் டைட்டில் லுக் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டானதோடு இந்த டைட்டிலை வைத்து வாரிசு படத்துடன் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர் அஜித்குமாரின் ரசிகர்கள்.

இந்நிலைகள் வாரிசு படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள 2023 பொங்கல் அன்றுதான் துணிவு  படமும் ரிலீஸ் ஆகும் என ஒரு கருத்தும் நிலவி வருகிறது. அதற்கு ஏற்ப பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் தனது ட்விட்டரில் "உலகம் முழுவதும் பொங்கல் அன்று துணிவு" என பதிவிட்டுள்ளார். இந்த தற்போது பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. ஒரு வேலை இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் மோதினால் எது வெல்லும் என்பதை அவரவர்களின் பேன்ஸ் பேஸ் தீர்மானிக்கும். இதனை பொருத்திருந்து பார்க்கலாம்.

 

Grand World Wide Release On Pongal 2023 💥💥 pic.twitter.com/kHd3G3Qows

— RK SURESH (@studio9_suresh)

 

click me!