எதார்த்தமான கதைகளை இயக்கி, பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் தருண் மஜும்தார், கடந்த சில வருடங்களாக உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், கொல்கத்தா மருத்துவமனையில் திங்கள்கிழமை (நேற்று) காலமானார்.
எதார்த்தமான கதைகளை இயக்கி, பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் தருண் மஜும்தார், கடந்த சில வருடங்களாக உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், கொல்கத்தா மருத்துவமனையில் திங்கள்கிழமை (நேற்று) காலமானார்.
92 வயதாகும் இயக்குனரும், தயாரிப்பாளருமான தருண் மஜும்தார் முதுமை பிரச்சனைகள் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14 அன்று, எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் செய்திகள்: சூரிய வம்சம் இட்லி உப்புமா ரகசியம் இதுதான்..? என்னோட ஃபேவரைட் டிஷ்...நடிகை தேவயானி கலகல பேச்சு...
மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும், தருண் மஜும்தார் நேற்று காலை 11.17 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். கடந்த சில வருடங்களாகவே முதுமையால் உண்டாகும் பிரச்சனைகளை அவர் எதிர்கொண்டு வந்த நிலையில், நுரையீரல் தொற்றாலும் அவர் அவதிப்பட்டு வந்தார். எனவே வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்து வந்தனர். ஆனால் நேற்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து காலமானார்.
மேலும் செய்திகள்: சுசிகணேசன் மீதான MeToo புகார் முதல் காளி தம் அடிக்கும் போஸ்டர் வரை.. தொடரும் சர்ச்சை- யார் இந்த லீனா மணிமேகலை?
இவரது மரணம் வங்க மொழி ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலர் தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். அதே போல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தருண் மஜூம்தாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு , அவரது மறைவு "திரையுலகிற்கும் உலகிற்கும் ஒரு பெரிய இழப்பு" என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: மணமுடித்த நாயகிகள்..ஜோதிகா முதல் நயன்தாரா வரை எந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள் தெரியுமா?
தருண் மஜூம்தார் 'கஞ்சர் ஸ்வர்கா', 'பாலடக்' , 'குஹேலி' போன்ற பல தரமான திரைப்படங்களை இயக்கியுள்ளவர். 1990 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள இவர் ஐந்து பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.