Leena Manimekalai : இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ள காளி என்கிற ஆவணப்படத்திற்கு தடைவிதிக்கக் கோரி டெல்லியை சேர்ந்த வினீத் ஜிண்டால் என்கிற வழக்கறிஞர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
தமிழில் செங்கடல், மாடத்தி போன்ற படங்களை இயக்கியுள்ளவர் லீனா மணிமேகலை. இவர் அடுத்ததாக காளி என்கிற ஆவணப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். இந்த ஆவணப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் அதில் காளி வேடமிட்டிருந்த பெண் கையில் LGBT சமூகத்தில் கொடியையும், வாயில் சிகரெட்டும் வைத்திருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
இதையும் படியுங்கள்... டொராண்டோ கண்காட்சியில் இருந்து காளி போஸ்டரை அகற்றுங்கள்… கனடாவில் உள்ள இந்திய தூதரகம் அதிரடி!!
இந்துக் கடவுளான காளியை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக பாஜக-வினர் கண்டனக் குரல்கள் எழுப்பினர். அவரை கைது செய்ய வேண்டும் எனக் கூறி டுவிட்டரில் #ArrestLeenaManimekalai என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் செய்து வந்தனர்.
இதையும் படியுங்கள்... குடும்பத்துடன் பீச்சில் குதூகலமாக போஸ் கொடுத்த நடிகை ரம்பா!
இவ்வாறு லீனா மணிமேகலை இயக்கிய காளி என்கிற ஆவணப்பட போஸ்டருக்கும் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ள காளி என்கிற ஆவணப்படத்திற்கு தடைவிதிக்கக் கோரி டெல்லியை சேர்ந்த வினீத் ஜிண்டால் என்கிற வழக்கறிஞர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்... மணமுடித்த நாயகிகள்..ஜோதிகா முதல் நயன்தாரா வரை எந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள் தெரியுமா?
இந்த எதிர்ப்புகளுக்கெல்லாம் சற்றும் அசராத லீனா மணிமேகலை, இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன் என அதிரடியாக பதிவிட்டு டுவிட்டரில் பதிலடி கொடுத்தார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : ““எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்” என பதிவிட்டுள்ளார்.