பிரம்மாண்ட வெற்றிவிழா நடத்த உள்ள உதயநிதி... விஜய் முதல் கமல் வரை யார் யாரெல்லாம் கலந்துக்க போறாங்க தெரியுமா?

Published : Jul 04, 2022, 01:50 PM IST
பிரம்மாண்ட வெற்றிவிழா நடத்த உள்ள உதயநிதி... விஜய் முதல் கமல் வரை யார் யாரெல்லாம் கலந்துக்க போறாங்க தெரியுமா?

சுருக்கம்

Udhayanidhi stalin : உதயநிதி ஸ்டாலின் தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் தயரிக்கிறது. 

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் எம்.எல்.ஏ. ஆனார். திமுக ஆட்சிக்கு வந்த பின் தமிழ் திரையுலகில் உதயநிதி ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. ஏனெனில் பிரபாஸின் ராதே ஷ்யாம் முதல் மாதவனின் ராக்கெட்ரி வரை இந்த ஆண்டு வெளியான பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தையும் உதயநிதி தான் வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்... மருத்துவமனையிலிருந்து திரும்பிய விஜயகாந்த்..உடல்நிலை எப்படி இருக்கு தெரியுமா?

இவர் வெளியிட்ட படங்களில் எஃப்.ஐ.ஆர், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைத் தழுவின. இதன்காரணமாக இந்த படங்களின் வெற்றியை ஒரு விழாவாக நடத்தி கொண்டாட உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... என்ன அழகு எத்தனை அழகு...கண் கூசுதே..ப்பா ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் ...

இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் தமிழக முதல்வரும், நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தந்தையுமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... ஆதித்ய கரிகாலனாக கெத்தான தோற்றத்தில் விக்ரம்... வைரலாகும் பொன்னியின் செல்வன் படத்தின் சர்ப்ரைஸ் போஸ்டர்

உதயநிதி ஸ்டாலின் தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் தயரிக்கிறது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் பகத் பாசில், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!