Ponniyin selvan : பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. முதலாவதாக நடிகர் விக்ரமின் கதாபாத்திரம் அடங்கிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் தற்போது பொன்னியின் செல்வன் என்கிற பிரம்மாண்ட படைப்பை உருவாக்கி உள்ளார். இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... Rajamouli : மகாபாரதத்தை படமாக்க ராஜமவுலி போட்ட மாஸ்டர் பிளான்... அப்டேட் கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் இருமாதங்களே உள்ளதால் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள்... ரஜினி வீடருகே தியேட்டர், ஜிம் உடன் கூடிய பிரம்மாண்ட பங்களா கட்டும் நயன்! இன்டீரியருக்கு மட்டும் இத்தனை கோடியா?
பொன்னியின் செல்வன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. அதன்படி கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோரது தோற்றங்களுடன் கூடிய தனித்தனி போஸ்டர்களாக வெளியிடப்பட்டு இருந்தன. இதில் விக்ரமின் போஸ்டர் மட்டும் படு மோசமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
இதையும் படியுங்கள்... Tamil Rockerz : தமிழ் ராக்கர்ஸ் மூலம் ஓடிடி-யில் தடம் பதிக்கிறார் அருண் விஜய் - டீஸருடன் வந்த மாஸ் அப்டேட்
இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. முதலாவதாக நடிகர் விக்ரமின் கதாபாத்திரம் அடங்கிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன்படி இவர் ஆதித்ய கரிகாலன் எனும் பட்டத்து இளவரசர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் பர்ஸ்ட் லுக்கை விட சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.