Rajinikanth : ராக்கெட்ரி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இது அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் என மனதார பாராட்டி உள்ளார்.
மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாதவன், தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட மாதவன், படம் இயக்குவதில் ஆர்வம் செலுத்தி வந்தார். அந்த வகையில் அவர் இயக்கிய முதல் படம் ராக்கெட்ரி.
இதையும் படியுங்கள்... பிரம்மாண்ட வெற்றிவிழா நடத்த உள்ள உதயநிதி... விஜய் முதல் கமல் வரை யார் யாரெல்லாம் கலந்துக்க போறாங்க தெரியுமா?
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் மாதவன். அதுமட்டுமின்றி இப்படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்திலும் அவரே நடித்திருந்தார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... மருத்துவமனையிலிருந்து திரும்பிய விஜயகாந்த்..உடல்நிலை எப்படி இருக்கு தெரியுமா?
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கடந்த ஜூன் 1ந் தேதி வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்து வருகிறது.
இதையும் படியுங்கள்... Iswarya menon hot: என்ன அழகு எத்தனை அழகு...கண் கூசுதே..ப்பா ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் ...
இந்நிலையில், ராக்கெட்ரி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவை பாராட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : “நமது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்களை செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் நம்பி நாராயணன் அவர்களின் வரலாற்றை மிகத் தத்ரூபமாக படமாக்கி, முதல் படத்திலேயே தலைசிறந்த இயக்குனர் என நிரூபித்து இருக்கிறார் மாதவன். ராக்கெட்ரி அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்” என கூறி உள்ளார்.