ஹிருத்திக் ரோஷனின் பிடிவாதத்தால் விக்ரம் வேதா ரீமேக்கின் பட்ஜெட் எகிறியதா? - உண்மையை ஓப்பனாக சொன்ன படக்குழு

By Ganesh A  |  First Published Jul 5, 2022, 9:56 AM IST

Vikram Vedha : விக்ரம் வேதா இந்தி ரீமேக்கின் ஷூட்டிங்கை துபாயில் தான் நடத்த வேண்டும் என்று நடிகர் ஹிருத்திக் ரோஷன் அடம்பிடித்ததாகவும், இதனால் படத்தின் பட்ஜெட் பன்மடங்கு அதிகரித்ததாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.


புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் விக்ரம் வேதா. இப்படத்தில் விக்ரமாக மாதவனும், வேதாவாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். மாஸான கதையம்சம் கொண்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. இதுதவிர இப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றவும் கடும் போட்டி நிலவியது.

இதையும் படியுங்கள்... சுசிகணேசன் மீதான MeToo புகார் முதல் காளி தம் அடிக்கும் போஸ்டர் வரை.. தொடரும் சர்ச்சை- யார் இந்த லீனா மணிமேகலை?

Tap to resize

Latest Videos

அந்த வகையில் விக்ரம் வேதா திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தையும் புஷ்கர் காயத்ரி தான் இயக்குகின்றனர். இப்படத்தில் மாதவன் நடித்த விக்ரம் வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் நடிக்கிறார். அதேபோல் விஜய் சேதுபதியின் வேதா கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... குடும்பத்துடன் பீச்சில் குதூகலமாக போஸ் கொடுத்த நடிகை ரம்பா!

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இதனிடையே விக்ரம் வேதா இந்தி ரீமேக்கின் ஷூட்டிங்கை துபாயில் தான் நடத்த வேண்டும் என்று நடிகர் ஹிருத்திக் ரோஷன் அடம்பிடித்ததாகவும், இதனால் படத்தின் பட்ஜெட் பன்மடங்கு அதிகரித்ததாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையும் படியுங்கள்... Iravin Nizhal : ரிலீசுக்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் 3 விருதுகளை தட்டித்தூக்கிய இரவின் நிழல்

இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் ஷூட்டிங்கை இந்தியாவின் லக்னோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தி உள்ளோம். துபாயில் நடத்தியதற்கு காரணம் அங்கு தான் பயோ பபுல் உடன் பாதுகாப்பாக ஷூட்டிங் நடத்த முடிந்தது. அதனால் அங்கு ஷூட்டிங் நடத்தினோம். மற்றபடி இதற்கு ஹிருத்திக் ரோஷனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அதுவெறும் வதந்தி என படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

click me!