Athulya Ravi: நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை; கேமரா இருப்பது தெரியாமல் பணிப்பெண்கள் விபரீத செயல்

By Velmurugan s  |  First Published Jul 5, 2024, 6:13 PM IST

கோவையில் நடிகை அதுல்யா ரவியின் வீட்டில் பணம், பாஸ்போர்ட்டை திருடியதாக அவரது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நாடோடிகள் 2, காதல் கண்கட்டுதே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருப்பவர் நடிகை அதுல்யா ரவி. இவரது சொந்த ஊர் கோவை ஆகும். இவர் கோவையில் உள்ள வடவள்ளி, மருதம் சாலையில் உள்ள வீட்டில் தனது தாயார் விஜயலட்சுமி உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூபாய் 2 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாகக் கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

கண்ட இடத்தில் கை வைத்த காமுகன்; பைக்கில் இருந்து கீழே குதித்து தப்பிய மூதாட்டி

இதை அடுத்து தாய் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இவர்களது வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்து பாளையத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

Shocking Video: தஞ்சையில் மரண பீதியை ஏற்படுத்திய தனயார் பேருந்து ஓட்டுநர்; உயிர் பயத்தில் அலறிய பயணிகள்

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். மேலும் காவல்துறையின் தொடர் விசாரணையில் செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 1500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டையும் மீட்பதற்காக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!