Coolie Shooting Begins: சூப்பர் ஸ்டாரின் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிரடி... சரவெடியாக ஆரம்பமானது!

Published : Jul 05, 2024, 01:24 PM IST
Coolie Shooting Begins: சூப்பர் ஸ்டாரின் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிரடி... சரவெடியாக ஆரம்பமானது!

சுருக்கம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் துவங்கியுள்ளதாக படக்குழு அதிகார பூர்வாமாக அறிவித்துள்ளது.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் நிறைவடைந்த நிலையில், இதை தொடர்ந்து இமயமலை சென்ற ரஜினிகாந்த், பின்னர் குடும்பத்தினருடன் ஓய்வு நாட்களை கழித்து வந்தார். 

மேலும் ஏற்கனவே ஜூலை முதல் வாரத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'கூலி' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.

பணத்தாசை யாரை விட்டுச்சு! ராஷ்மிகாவின் 'குபேரா' பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

'கூலி' படத்தின் ப்ரீ படப்பிடிப்புக்கான பணிகளில், கடந்த மூன்று மாதத்திற்கு மேல் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இன்று முதல்... ஹைதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார்.

மேலும் 'கூலி' படப்பிடிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவலில், முதல் கட்ட படப்பிடிப்பை இயக்குனர் லோகி 4 நாட்கள் மட்டுமே நடத்த திட்டமிட்டுள்ளாராம். அதை தொடர்ந்து ஜுலே 10-ஆம் தேதியில் இருந்து... இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும், இதற்கான செட் அமைக்கும் பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறதாம்.

செண்பகமே.. செண்பகமே பாடல் நிஷாந்தியா இது? 54 வயதில்... ஹாலிவுட் ஹீரோயின் போல் கவர்ச்சியில் அலறவிடும் போட்டோஸ்

இடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பையில் நடைபெற உள்ள அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா திருமண நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினிகாந்தை வைத்து சன் பிச்சர்ஸ் இயக்கம் இந்த படத்தில், கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?
மதகஜராஜா முதல் டூரிஸ்ட் ஃபேமிலி வரை... 2025-ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் மூவீஸ்