Vijay GOAT : விஜய்யின் கோட் படத்திற்கு செக்.. ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை பயன்படுத்த தடை?- தேமுதிக அதிரடி

By Ajmal Khan  |  First Published Jul 5, 2024, 12:34 PM IST

ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என தேமுதிக அறிவித்துள்ளது. 


ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்

நடிகரும், தேமுதிக தலைவரமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல்நிலை பாதிப்பால் காலாமனார். இவரது மறைவு தேமுதிக தொண்டர்களை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி அடையவைத்தது. திரைப்படத்தில் இனி விஜயகாந்தை பார்க்க முடியாதே  என தவித்தனர். இந்தநிலையில் தான் நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் விஜயகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

Latest Videos

இது தொடர்பாக விஜயகாந்தின் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது.

ஒரே வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 'கல்கி 2898 AD' திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

 

யாரும் அனுமதி பெறவில்லை

எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தேமுதிக அறிவித்துள்ளது. 

'கல்வி விருது விழா' முடிந்த பின்னர்... யாரும் எதிர்பாராததை செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி!

click me!