பணத்தாசை யாரை விட்டுச்சு! ராஷ்மிகாவின் 'குபேரா' பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Published : Jul 05, 2024, 12:34 PM IST
பணத்தாசை யாரை விட்டுச்சு! ராஷ்மிகாவின் 'குபேரா' பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

சுருக்கம்

'சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் - ராஷ்மிகா நடிக்கும் குபேரா' படத்தில் இருந்து ராஷ்மிகா மந்தனாவின்  முதல் தோற்றம் மற்றும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  

தேசிய விருதின் மூலம் அதிக பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் சமூகம் சார்ந்த கதையம்சம் கொண்ட 'குபேரா', வரவிருக்கும் பான்-இந்திய திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக கருதப்படுகின்றது. மிகவும்  எதிர்பார்க்கப்படும் இந்த சமூக சார்ந்த கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா கவர்ந்திழுக்கும் காட்சிகளுடன் வெவ்வேறு கதாபாத்திரங்களை பின்னிப் பிணைத்துள்ளார்.

ஒரே வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 'கல்கி 2898 AD' திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

இன்று தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில்  ராஷ்மிகா மந்தனாவின் அதிகாரப்பூர்வ முதல் தோற்றம் வெளியாகி  இணையத்தில் வைரலாகியுள்ளது. ராஷ்மிகா ஒரு அசாதாரணமான, வித்தியாசமான அவதாரத்தில் காணப்படுகிறார், இது பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இருவருக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

சற்று முன்னர் இப்படத்தில் இருந்து ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ராஷ்மிகா இளஞ்சிவப்பு நிற சல்வார் அணிந்து, ஒரு காட்டு பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட சூட்கேஸை இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றம் உள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

செண்பகமே.. செண்பகமே பாடல் நிஷாந்தியா இது? 54 வயதில்... ஹாலிவுட் ஹீரோயின் போல் கவர்ச்சியில் அலறவிடும் போட்டோஸ்

முன்னதாக, 'குபேராவில்' இருந்து நடிகர் தனுஷ் மற்றும் 'கிங்' நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோரின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது, இது நாடு முழுவதும் பார்வையாளர்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 'குபேரா'வில் தனுஷ், 'கிங்' நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரிக்கின்றனர். 'குபேரா' ஒரு பான்-இந்தியா பன்மொழி படம் ஆகும். இது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மம்மூட்டியின் ‘களம்காவல்’ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
வேட்டியே அவிழும் அளவுக்கு ஆட்டம் போட்டபடி இளையராஜா கம்போஸ் பண்ணிய ஜாலியான பாடல் பற்றி தெரியுமா?