
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலுக்கென தனி ரசிக பட்டாளம் இருக்கின்றனர். 2 திருமணம் செய்து கொண்டு கதாநாயகன் எதிர்கொள்ளும் சிக்கல்களை அடிப்படையாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலின் ஹீரோவாக பூமிநாதன் என்ற கேரக்டரில் ஆஷிஷ் சக்ரவர்த்தி நடித்து வருகிறார். முத்தழகு சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள ஆஷிஷ் தனது காதலியை அறிமுகம் செய்துள்ளார். ஆங்கிலத்தில் Her அதாவது அவள் என்று பதிவிட்டு ஒரு ஹார்ட் இமோஜியை பதிவிட்டுள்ளார். மேலும் தனது காதலி காய்திரி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் இவர் தான் உங்கள் காதலியா என்று கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு ஆம் என்று பதிலளித்துள்ள ஆஷிஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவரின் வீடியோவில் “ இறந்த பிறகும் மனித மூளை 7 நிமிடங்களுக்கு செயல்படும். சிறந்த நினைவுகளை வைத்திருக்கும். என்னுடைய கடைசி 7 நிமிடங்கள் : அவள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஷிஷின் காதலி காயத்ரியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஏற்கனவே ஆஷிஷ் உடன் இருக்கும் போட்டோக்கள், வீடியோக்களை பதிவிட்டு தனது காதலை உறுதிப்படுத்தினார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி ஒரு பல் மருத்துவர் ஆவார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
இந்த நிலையில் ஆஷிஷும் தற்போது காதலியை அறிமுகம் செய்துள்ளதுடன் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஜோடி இதே அன்பு, மகிழ்ச்சி உடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.