தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடர் குழந்தைகளுக்கு இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என்று வாக்கு கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடர் குழந்தைகளுக்கு இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என்று வாக்கு கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சுடர் தன்னுடைய தோழிக்கு போன் போட்டு போனை ஹேக் பண்ண தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லு என்று விசாரிக்கிறாள். அடுத்ததாக அஞ்சலி சோகமாக வர சுடர் என்னாச்சு என்று கேட்க அஞ்சலி அப்பாவும் மனோகரி ஆண்டியும் கல்யாணம் பண்ணிக்கிறது பிடிக்கல என்று சொல்கிறாள்.
சுடர் அதுதான் இந்த கல்யாணத்தை நடக்க விடமாட்டேன் என்று சொல்லி இருக்கேன்ல என்று ஆறுதல் சொல்ல அஞ்சலி நீ எங்க நாலு பேரையும் நல்லா தானே பாத்துக்குற.. நீயே எங்க அப்பாவ கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்ல சுடர் ஷாக் ஆகிறாள். பிறகு அஞ்சலியை சமாளித்து அனுப்பி வைக்கிறாள்.
அடுத்ததாக சுடர் தூங்கிக் கொண்டிருக்க மணக்கோலத்தில் இருக்கும் அவளுக்கு யாரோ மெட்டி போட்டு விடுவது போல கனவு கண்டு அதிர்ச்சியாகி எழுந்து கொள்கிறாள். மறுநாள் காலையில் இதே கனவை நினைத்துக் கொண்டு கனகவல்லி, செல்வி, ராமையா என யார் கூப்பிடுவதையும் கண்டு கொள்ளாமல் புலம்பியபடி நடந்து செல்கிறாள்.
அடுத்ததாக மனோகரி எழிலுடன் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்த திட்டம் போட குழந்தைகள் இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என தொடர்ந்து இடையூறு செய்து இருவரும் சேர்ந்து போட்டோ எடுக்க விடாமல் செய்கின்றனர். கடைசியாக ஒரே ஒரு குரூப் போட்டோ மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து எல்லோரையும் கூப்பிட சுடரும் குரூப் போட்டோவில் நிற்க வர மனோகரி அவளது காலால் சுடரை தட்டி விட்டு கீழே விழ வைக்க பிளான் போடுகிறாள்.
ஆனால் எதிர்பாராத விதமாக எழில் அவளை தாங்கி பிடித்து என்ன ஆச்சு சுடர் காலில் சுளுக்கு பிடிச்சி இருக்கா என்று ஒவ்வொரு விரலாக பிடித்து சுளுக்கு எடுக்க மனோகரி இதை பார்த்து கடுப்பாகிறாள். சுடருக்கு எழில் நடந்து கொள்வதும். கனவில் வந்ததும் ஒரே மாதிரி இருப்பதால் குழப்பமடைந்து திடீரென காலை இழுத்துக் கொண்டு ஒன்னும் இல்லை என்று சொல்லி விடுகிறாள்.
அடுத்ததாக சுடர் ரூம் பாயை பார்க்க செல்ல அவன் சுடரை பார்த்ததும் எஸ்கேப் ஆக முயற்சி செய்ய ஓடும் போது போனைத் தவற விடுகிறான். அந்த போனை எடுக்கும் சுடர் மனோகரிக்கு போன் போட்டு ஒரு சாஃப்ட்வேர் உதவியுடன் ஆண் குரலில் பேசுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.