என் பையனுக்கு கூட இதை சொன்னது இல்லை! நடிகர் பிரசாந்த்துக்கு சிவாஜி கணேசன் கொடுத்த 3 அட்வைஸ் என்ன தெரியுமா?
நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்... தன்னுடைய மகன் அறிமுகமான புதிதில், சிவாஜி கணேசன் கொடுத்த 3 அட்வைஸ் குறித்து கூறியுள்ளார்.
இன்று தமிழ் சினிமாவில் எட்ட முடியாத உயரத்தை அடைந்திருக்கும் விஜய் - அஜித் போன்றவர்கள்... கோலிவுட் திரையுலகில் நிலைத்து நிற்க முடியாமல் தடுமாறிய போதே... அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து, இளம் ரசிகைகள் மனதில் குடி கொண்டவர் நடிகர் பிரசாந்த்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக அறியப்படும் தியாகராஜனின் மகன் என்பதால் இவருக்கு சினிமாவில் அறிமுகமாகும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது. 1990-ஆம் ஆண்டு அரும்பிய மீசையுடன் 'வைகாசி பொறந்தாச்சு' படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் இளம் ரசிகர்களை கவரும் ரொமான்டிக் ஹீரோவாக அறியப்பட்ட இவருக்கு, தமிழை தாண்டி, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.
மற்ற மொழிகளில் சில படங்களில் மட்டுமே நடித்த பிரசாந்த், தமிழில் தரமான படங்களை தேர்வு செய்து நடித்தார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான செம்பருத்தி, செந்தமிழ் செல்வன், ஆண் அழகன், கல்லூரி வாசல், ஜீன்ஸ், ஜோடி, கண்ணெதிரே தோன்றினால், பூமகள் ஊர்வலம், ஸ்டார், தமிழ், மஜினு, வின்னர் என பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
கடைசியாக இவர் ராம் சரண் ஹீரோவாக நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான Vinaya Vidheya Rama படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து... இவர் நடித்து முடித்துள்ள அந்தகன் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தளபதி விஜய்யுடன் இணைந்து 'கோட்' படத்திலும் நடித்துள்ளார்.
Andhagan
மீண்டும் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க போராடி வரும் பிரசாந்த்... அதற்க்கு முழுமையாக நம்பி இருக்கும் திரைப்படம் 'அந்தகண்' படத்தை தான். இப்படம் ஹிந்தியில் வெளியான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது.
thiyagarajan
இது ஒருபுறம் இருக்க, தற்போது நடிகரும் - தயாரிப்பாளருமான பிரசாந்தின் தந்தை தியாகராஜன், தன்னுடைய மகனுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கொடுத்த 3 முத்தான அட்வைஸ் குறித்து பேட்டி ஒன்றியில் கூறியுள்ளார்.
தன்னுடைய மகன் கதாநாயகனாக மாறிய பின்னர், ஒரு நாள் சிவாஜி... தியாகராஜனை அழைத்து உன்னுடைய மகனை அழைத்து வா என்று கூறினாராம். தியாகராஜன் பிரசாந்துடன் வந்த போது, சில நிமிடம் பிரசாந்துடன் பேசிய சிவாஜி, இதை என் மகனுக்கு கூட நான் கூறவில்லை. ஒரு சிறந்த நடிகனாக இருக்க இந்த 3 விஷயங்களை மட்டும் கடைபிடிக்க தவறி விடாதே என சொன்னாராம்.
actor thiyagarajan
அதாவது, படப்பிடிப்பு 6 மணி என்றால்... சரியாக 5:30 மணிக்கெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நீ ரெடியாகி இருக்க வேண்டும். அதே போல், இயக்குனர் உன்னிடம் என்ன சொன்னாலும் அதை ஆமோதிக்காமல் அவரை நம்பி நடிக்க வேண்டும். அதை விட மிகவும் முக்கிய ஒரு படத்தில் ஹீரோயினுடன் நடிக்க பின்னர் எந்த சவகாசமும் வைத்து கொள்ள கூடாது என கூறினாராம். சிவாஜி பல வருடங்களுக்கு முன் கூறிய இந்த அறிவுரையை இப்போது வரை பிரசாந்த் பின்பற்றி வருவதாகவும் தியாகராஜன் கூறி உள்ளார்.