அபிராமி வீட்டு சொத்தை அபேஸ் பண்ண ஐஸ்வர்யா செய்த தில்லாலங்கடி வேலை - கார்த்திகை தீபம் சீரியலில் செம ட்விஸ்ட்

By Ganesh A  |  First Published Jul 1, 2024, 3:14 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்தி போட்டோகிராபரை பார்க்க சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்தி போட்டோகிராபரை பார்க்க சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கார்த்திக் போட்டோகிராபரை சந்திக்க சென்றபோது ரியாவை பிடிக்க முயற்சி செய்தேன் கடைசியில் முடியாமல் போகிறது. 

மறுபக்கம் ரம்யா தீபாவிடம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம் என்று சொல்லி நல்லா இருந்தா சொல்லு போலாம் என்று சொல்ல, தீபா நீ என்ன பேசுற? அத்தைக்காக நான் கண்டிப்பா இதை செஞ்சு தான் ஆகணும் என்று சொல்கிறாள். 

Latest Videos

உனக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பதில் சொல்றது என்று ரம்யா கேட்க உடனே தீபா போனை எடுத்து இந்த பரிகாரத்தை நான் விருப்பப்பட்டு தான் செய்கிறேன் இதுல எனக்கு எந்த பிரச்சினையை ஏற்பட்டாலும் அதற்கு நாம் மட்டுமே பொறுப்பு என்று பேச ரம்யா நம்ப ரூட்டு கிளியர் என சந்தோஷப்படுகிறாள்.  

இதையும் படியுங்கள்... அண்ணா சீரியல் : பதவியேற்றதும் ஆக்‌ஷனில் இறங்கிய பரணி... கோவில் நகை திருட்டில் கைதானாரா செளந்தரபாண்டி?

அடுத்ததாக ஐஸ்வர்யா ரூமில் இருக்க அருண் அவளை எழுந்து சென்று முகத்தை கிளம்பி வர சொல்ல ஐஸ்வர்யா சென்றதும் தலையணை கீழே அச்சு வைத்த சோப்பு இருப்பதை பார்த்து சந்தேகப்படுகிறான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... The GOAT Movie : விஜய்யின் கோட் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை மறைமுகமாக கைப்பற்றியதா ரெட் ஜெயண்ட் மூவீஸ்?

click me!