முத்தமும் அரவணைப்பும் கிடைச்சது... சரிகமப டெடிகேஷன் ரவுண்டுக்கு பின் மாறிய வாழ்க்கை; மனம் திறந்த ஸ்வேதா

By Ganesh A  |  First Published Jun 27, 2024, 2:10 PM IST

சரிகமப நிகழ்ச்சியில் தந்தை தன் மகளின் கடிதத்தை படித்த பின் அவரின் காலில் விழுந்த சம்பவம் வைரலான நிலையில், அதுபற்றி ஸ்வேதா பேசி இருக்கிறார்.


ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்,  ஒளிபரப்பாகி வரும் நம்பர் 1 ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்னு சரிகமப சீசன் 4. 23 திறமையான போட்டியாளர்களுடன் தொடங்கி, விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்க, ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். 

ஒவ்வொரு வாரமும், வித்தியாசமான கான்செப்ட் தேர்வு செய்து... தங்களுடைய பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதை வென்று வருகின்றனர் போட்டியாளர்கள். அப்படி தன்னுடைய இனிமையான குரலால் பலர் மனதை வருடி வரும் ஸ்வேதா, இந்த வாரம் தனது அப்பாவிற்கு டெடிகேட் செய்வதாக சொல்லி பாடிய ஆனந்த யாழை மீட்டுகிறாயே என்ற பாடல் அரங்கத்தையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்... பான் இந்தியா ஹீரோக்களாக வலம் தெலுங்கு நடிகர்கள்.. அதிக சம்பளம் வாங்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா?

இவர் இந்த பாடலை பாடுவதற்கு முன்பாக, தனது அப்பாவுக்காக ஒரு கடிதத்தையும் எழுதி இருந்தார். அந்த கடிதத்தை தன்னுடைய அப்பாவையே மேடைக்கு வந்து படிக்கவும் சொன்னார். அதில் எழுதி இருந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அப்பாவின் அன்பிற்காகவும், அரவணைப்பிற்காகவும் ஸ்வேதா எப்படி ஏங்குகிறார் என்பதை நம் கண் முன் நிறுத்தியது. அந்த கடிதத்தில்... "அப்பா  எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். ஆனால் உங்களுக்கு என்னை பிடிக்குமா? பிடிக்காதானு? இதுவரைக்கும் எனக்கு தெரியவே தெரியாது. அதை நீங்க இதுவரைக்கும் சொன்னதும் இல்லை. பாசத்தை காட்டியதும் இல்லை என்று பேச அவர் பிடிக்கும் ஆனால் இதுவரைக்கும் வெளியே காட்டியதில்லை என அப்படியே உடைந்து போய் கண்ணீர் விட... அப்பாவுக்கு பதிலாக ஸ்வேதா அந்த லெட்டரை படிக்க தொடங்கினார். 

இது என்னுடைய ரொம்ப நாள் ஏக்கம்.. எனக்கு உங்க கிட்ட இருந்து ஒரே ஒரு முத்தமும், அரவைணைப்பும் வேண்டும் என்று சொல்ல அவரது அப்பா யாரும் எதிர்பாராத விதமாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்க மொத்த மேடையும் கண்ணீர் மயமானது. அதே நேரத்தில் ஸ்வேதாவின் ஆசைகளும் நிறைவேறின, ஆமாம் அவரது அப்பா முதல் முறையாக மகளை கட்டியணைத்து முத்தமிட்டார். அன்பின் வெளிப்பாட்டை அந்த அரங்கமே கொண்டாடியது.

பின்னர் பேசிய ஸ்வேதா, என் அப்பா என்னையே காலில் விழ விட மாட்டார், அதெல்லாம் வேண்டாம்னு தள்ளி போயிடுவார். அப்படி இருக்கும் போது அவர் என் கால்ல விழுவார்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.  அவர் கீழே குனிந்தும் நானும் அப்படியே உட்கார்ந்துட்டேன். என்னை மீறி என் கண்கள் கலங்க தொடங்கிடுச்சு. உன்னை நான் இவ்வளவு ஏங்க வைத்திருக்கேனா.. உன் மனசை புரிஞ்சிக்காமல் போய்ட்டேனு அழுதார். இறுதியா நான் கேட்ட முத்தமும் அரவணைப்பும் கிடைச்சது. அது என்னால் மறக்க முடியாது. ரொம்ப சந்தோசமாக இருந்தது என கூறியுள்ளார்

இதையும் படியுங்கள்... முதலிடத்தை இழந்த சிங்கப்பெண்ணே சீரியல்; டாப் 10க்குள் நுழைந்த கார்த்திகை தீபம்- இந்தவார டாப் 10 சீரியல் லிஸ்ட்

click me!