- Home
- Gallery
- அண்ணா சீரியல் : பதவியேற்றதும் ஆக்ஷனில் இறங்கிய பரணி... கோவில் நகை திருட்டில் கைதானாரா செளந்தரபாண்டி?
அண்ணா சீரியல் : பதவியேற்றதும் ஆக்ஷனில் இறங்கிய பரணி... கோவில் நகை திருட்டில் கைதானாரா செளந்தரபாண்டி?
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி பதவியேற்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பரணி பதவியேற்றதால் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Zee Tamil Anna Serial
அதாவது சௌந்தரபாண்டி அடுத்ததா நகை விஷயத்தை தான் கையில் எடுப்பா.. அதுக்குள்ள நகையை இடமாற்றி ஆக வேண்டும் என்று திட்டம் போட்டு சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து போலீஸ்களுக்கு டீ-ல் மயக்க மருந்தை கலந்து கொடுத்து நகை பெட்டியை எடுத்துச் செல்கின்றனர். மறுபக்கம் பதவியேற்ற பரணி கோவில் நகைகளை பரிசோதனை செய்ய அத்தனையும் கவரிங் என தெரிய வருகிறது.
இதையும் படியுங்கள்... திரிஷா, நயன்தாராவை ஓரங்கட்டிவிட்டு... மீண்டும் செல்பி புள்ளயோடு ஜோடி சேரும் விஜய் - தளபதி 69 அப்டேட்
Anna Serial Update
இதனால் நகையை சௌந்தரபாண்டி தான் எடுத்திருக்க வேண்டும் என எல்லோரும் சொல்கின்றனர். சௌந்தரபாண்டி என் மேல சந்தேகப்படுகிறீர்களா? என் வீட்டுக்கு வந்து தேடிப் பாருங்க என்று சொல்கிறார். அடுத்ததாக சௌந்தரபாண்டி வீட்டில் தேடுதல் வேட்டை நடத்த பாண்டியம்மாவிடம் மாரியம்மன் நகைப்பெட்டி இருப்பதை கண்டு பிடிக்கின்றனர்.
Anna Serial Today Episode
உடனே சௌந்தரபாண்டி அக்கா நகையை நீயா எடுத்த என்று பாண்டியம்மா மீது பழியை போட்டு நாடகம் போடுகிறார். இதையடுத்து பாண்டியம்மா கைது செய்யப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... என்ன ஆச்சு? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகர் சங்கம் சார்பில் நடந்த முக்கிய ஆலோசனை..! வெளியான அறிக்கை!