எம்மாடியோவ் புதிய பிளான் போட்ட த்ரிஷா: விஜய் வீட்டிற்கு அருகிலேயே ரூ.35 கோடியில் பிரமாண்ட வீடு!

Published : Jan 16, 2023, 10:20 PM ISTUpdated : Jan 17, 2023, 03:44 AM IST
எம்மாடியோவ் புதிய பிளான் போட்ட த்ரிஷா: விஜய் வீட்டிற்கு அருகிலேயே ரூ.35 கோடியில் பிரமாண்ட வீடு!

சுருக்கம்

நடிகை த்ரிஷா விஜய் வீட்டிற்கு அருகில் ரூ.35 கோடியில் வீடு வாங்கியதாக தகவல் வெளியாகி வருகிறது.  

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை த்ரிஷா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். விஜய், அஜித் உடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு இவரது மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். அப்போதும், ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 நல்ல வரவேற்பு கொடுத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து 2ஆவது பாகத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

ஹாலிவுட் நாயகிகளையே மிஞ்சிய தமன்னா! எல்லை தாண்டிய டீப் நெக் கிளாமரில்... கவர்ச்சி விருந்து வைத்த போட்டோஸ்!

தற்போது சதுரங்க வேட்டை 2, ராம் பார்ட் 1, தி ரோடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இதற்கு முன்னதாக விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் கில்லி, திருப்பாசி, ஆதி, குருவி ஆகிய படங்களில் நடித்துள்ளனர். தளபதி67 படத்தில் விஜய் 46வயது நிரம்பிய டீக்கடைக்காரராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி பகவதி படத்தில் விஜய் டீக்கடை நடத்தி வரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தனது தம்பியை கொலை செய்ய, தான் ஒரு ரௌடியாக அவதாரம் எடுத்தார்.

Vaathi: வாத்தி 2ஆவது சிங்கிள்: தனுஷ் குரலில் வெளியாகும் நாடோடி மன்னன் லிரிக் வீடியோ!

அதே போன்று தான் தளபதி67 படமும் சின்ன சின்ன மாற்றத்தோடு உருவாவதாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இன்னும் 10 நாட்களுக்குள் தளபதி67 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து மன்சூர் அலிகான், கௌதம் மேனன் ஆகியோர் பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

தங்கலான் படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்: இனிமே தான் சிறப்பான சம்பவம் இருக்கு!

எனினும், தளபதி67 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்வதாக சொல்லப்படுகிறது. தளபதி67 படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வரும் ஒருபுறம் தகவல் வெளியானாலும், அஜித் நடிக்கும் AK62 படமும், தளபதி67 படமும் ஒரே நாளில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி வருகிறது.

AK62: அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்?

இந்த நிலையில், தான் தற்போது மாஸ் ஹீரோவான விஜய் வீட்டிற்கு அருகில் ரூ.35 கோடியில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியிருப்பதாக புதிதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே, அஜித் வீட்டிற்கு அருகில் ரூ.5 கோடியில் பிளாட் ஒன்றை வாங்கியிருந்தார். ஆனால் இந்த பிளாட்டில் அவர் குடியிருந்தாரா? இல்லையா? என்பது குறித்து தகவல் இல்லை. தற்போது விஜய் வீட்டிற்கு அருகில் ரூ.35 கோடியில் புதிதாக வீடு வாங்கியிருக்கிறார். இந்த வீட்டில் அவர் குடியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகவதி ஸ்டைலில் உருவாகும் தளபதி67: டீக்கடை ஓனராக நடிக்கும் விஜய்?

AK62: இது நெட்பிளிக்ஸ் பண்டிகை: ஜில்லா ஜில்லா தான் முடியாமல் போய்விட்டது: டுவிட்டரில் டிரெண்டாகும் AK62!

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை
யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் சீரியலில் அடிபொலி ட்விஸ்ட் வெயிட்டிங்