தனுஷின் குரலுக்கு கிடைத்த வெற்றி...ஒரே நாளில் மில்லியனை கடந்த வியூவ்ஸ்!

Published : Jul 16, 2022, 05:46 PM ISTUpdated : Jul 16, 2022, 05:53 PM IST
தனுஷின் குரலுக்கு கிடைத்த வெற்றி...ஒரே நாளில் மில்லியனை கடந்த வியூவ்ஸ்!

சுருக்கம்

நேற்று மாலை வெளியான இந்த பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.  படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. 

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் தமிழ் மொழி இசை நகைச்சுவை படமாக தயாரிக்கப்படுகிறது. அனிருத் தற்போது தனுஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.முன்னதாக தனுஷின் தங்க மகன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.  இதன் ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் மற்றும் படத்தொகுப்பை பிரசன்னா ஜி கே மேற்கொண்டு வருகின்றனர். இந்த படத்தை சான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..Varisu movie : ரிலீசுக்கு முன்பே ரூ.200 கோடி வசூல் அள்ளிய விஜய்யின் ‘வாரிசு’... செம்ம குஷியில் தயாரிப்பாளர்

திருச்சிற்றம்பலமாக தனுஷும், அனுஷ்காவாக ராசி கண்ணாவும், சோபனாவாக நித்யா மேனனும், ரஞ்சனியாக பிரியா பவானியும், திருச்சிற்றம்பலத்தின் தாத்தாவாக பாரதிராஜாவும், திருச்சிற்றம்பலத்தின் தந்தையும் இன்ஸ்பெக்டர் நீலகண்டனாக பிரகாஷ்ராஜும் நடித்த வருகின்றனர்.

தந்தையர் தினத்தன்று தாத்தாவும் பேரனும் பேசிக்கொள்ளும் கிளிப்ஸ் வெளியாகி வைரலானது இசை வெளியீட்டு இருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் பூஜையுடன் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது பிரகாஷ்ராஜுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது. பின்னர் மீண்டும் துவங்கிய படப்பிடிப்பு இந்த ஆண்டு துவக்கத்தில் நிறைவடைந்து பின்னணிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..இலைதழை அணிந்து..இயற்கையோடு சொக்க வைக்கும் கிளாமர் போஸ் கொடுத்த ஆதா ஷர்மா...

திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து முன்னதாக "தாய்க்கிழவி" என்னும் பாடல் வெளியானது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். தற்போது "மேகம் கருக்காதா" என்னும் பாடல் வெளியாகியுள்ளது. இந்த படலையும் தனுஷ் தான் எழுதி உள்ளார். இந்த இரு பாடல்களிலும் நித்யா மேனன் மற்றும் தனுஷ் இருவரும் இடம் பெற்றுள்ளனர். 

 

 

நேற்று மாலை வெளியான இந்த பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.  படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி தக்க வைத்துக் கொண்டுள்ளது. சன் நெக்ஸ்ட்டில்  ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தனுஷ் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், டோலிவுட்டில் வாத்தி, ஹாலிவுட்டில் தி கிரே மேன் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார். இதில் தி கிரே மேன் . திரைக்கு வர தயாராக உள்ளது. இதன் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. வரும் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..விஜய் பட இயக்குனரின் பிருந்தாவனம் நினைவாக பங்களா கட்டிய ஆர் ஆர் ஆர் நாயகன்!

படத்தில் தனுஷ் எதிர்மறை கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் விளம்பரத்தின் போது தனுஷ் பேசியிருந்ததும், சிறப்பு காட்சிகளை தன் மகனுடன் கண்டதுமான புகைப்படங்களும் வீடியோக்களும் வைரல் ஆகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!