"ஜோ & எனக்கு அளித்த ஆதரவுக்காக".. கார்கி குறித்து நன்றி சொன்ன சூர்யா !

Published : Jul 16, 2022, 04:36 PM IST
"ஜோ & எனக்கு அளித்த ஆதரவுக்காக".. கார்கி குறித்து நன்றி சொன்ன சூர்யா !

சுருக்கம்

கார்கி படம் குறித்து பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, "கார்கிக்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு நன்றி, ஜோவிற்கும் எனக்கும், நீண்ட நாட்களாக நினைவில் இருக்க, நன்றாக எழுதப்பட்ட சிறப்பாக உருவாக்கப்பட்ட படம் என எழுதியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிரபலமாக வலம் வரும் சாய்பல்லவி தற்போது கார்கி படத்தில் நடித்துள்ளார். கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தை  ராஜு, கௌதம் ராமச்சந்திரன் எழுதியுள்ளனர். இந்த படத்தை ரவிச்சந்திரன், தாமஸ் ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் ராமச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் காளி வெங்கட், ஐஸ்வர்ய லட்சுமி, ஆர்.எஸ். சிவாஜி சரவணன், ஜெயபிரகாஷ், பிரதாப், சுதாகர், கவிதாலயா கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..Varisu movie : ரிலீசுக்கு முன்பே ரூ.200 கோடி வசூல் அள்ளிய விஜய்யின் ‘வாரிசு’... செம்ம குஷியில் தயாரிப்பாளர்

படத்திற்கான ஒளிப்பதிவை     ஸ்ரையாண்டி பிரேம் கிருஷ்ணா அக்கட்டு மேற்கொள்ள, கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார். தமிழில் உருவான இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் மேற்கொண்டது. கடந்த ஜூலை 15ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. பாலியல் குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்படும் தனது 60 வயதான தந்தையை குற்றம் அற்றவர் என நிரூபிக்க மகள் போராடும் கதைக்களம் தான் கார்கி.

மேலும் செய்திகளுக்கு..இலைதழை அணிந்து..இயற்கையோடு சொக்க வைக்கும் கிளாமர் போஸ் கொடுத்த ஆதா ஷர்மா...

கார்கி யாக வரும் சாய்பல்லவி,  தனது தந்தயை மீட்க நீதிமன்றத்தில் போராடுகிறார். அப்போது அவரும்,  குடும்பத்தாரும் சமூகத்தால் மிகுந்த அவமானத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். எல்லாவற்றையும் மீறி தன் தந்தையை காப்பாற்றினாரா? என்னும் நீதிமன்ற வளாகம் சார்ந்த கதையாக இந்த படம் வெளியாகி உள்ளது.

 

படம் முதல் நாளில் ரூ.1.10 கோடி ரூபாய் வசூல் செய்தது இந்த படம் இரண்டாவது நாளில் ரூ.1.40 கோடி வசூலாக பெற்றுள்ளது. இதன் மூலம் படத்திற்கு போதுமான விளம்பரம் கிடைக்கவில்லை என பேசப்படுகிறது. முதல் நாளில் இரண்டு கோடிகள் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தொடக்க நாளில் குறைவான எண்ணிக்கையில் டிக்கெட் விற்பனையை கண்ட கார்கி இரண்டாம் நாளில் கணிசமாக முன்னேறியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..விஜய் பட இயக்குனரின் பிருந்தாவனம் நினைவாக பங்களா கட்டிய ஆர் ஆர் ஆர் நாயகன்!

இந்நிலையில் கார்கி படம் குறித்து பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, "கார்கிக்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு நன்றி, ஜோவிற்கும் எனக்கும், நீண்ட நாட்களாக நினைவில் இருக்க, நன்றாக எழுதப்பட்ட சிறப்பாக உருவாக்கப்பட்ட படம், பத்திரிகை, ஊடகங்கள், நலம் விரும்பிகள் மற்றும் பார்வையாளர்களின் அன்பு மற்றும் மரியாதைகள் மிகவும் மனதை தொட்ட ஒரு குழுவாக பாராட்டுகளை பெற்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!